பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

123

அவன் பாண்டி நாட்டில் அரணமைந்த ஏழு நகரங்களைக் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது. அரசின் எல்லையை விரிவுபடுத்த வேறெச்செயலும் அவன் செய்ததாகக் குறிப்பிடப்படவில்லை. தொல்லை நிரம்பிய குறுகிய கால ஆட்சிக்குபின் அவன் இறந்ததாகத் தோற்றுகிறது. அரசவைக்கு வருவோரிடம் அன்பிணக்கம் காட்டும்படி அவனுக்கு முதுகண்ணன் சாத்தான் அறிவுறுத்திய கீழ்வரும் பாட்டுச் சுவைகரமானது.

27

"நூறிதழ்களையுடைய கறையற்ற தாமரை மலரைப் போல, இவ்வுலகையாண்ட பெருங்குடியில் பிறந்தவர்களைக் கூர்ந்து கவனித்துப்பார். அவர்களில் மிகச் சிலரே பாட்டிலும், கதையிலும் புகழ் பரப்பியுள்ளார்கள். தாமரையின் உலர்ந்த இலைச்சருகுகள் போல அவர்கள் புகழின்றி வீழ்ந்துள்ளார்கள். ஆனால் கவிஞர் பாடல்களுக்கு இலக்கான செயல்கள் செய்த பெரியோர்களோ, மேலுலகங்களில் வான வூர்திகளில் செல்லுகின்றனர் என்று கேள்விப்படுகிறோம்."

66

அண்ணல் சேட்சென்னி நலங்கிள்ளியே! எதுவும் மாறிமாறி வாழ்ந்தும் மடிந்துமே வருவதைக் காண்பாய்.எல்லாம் அழிந்து மீண்டும் பிறக்கின்றன. கல்லாதவர்கள் கூடத் தண்மதியத்தைப் பார்த்து இதை அறிந்துகொள்ளலாம். அது யாவரும் காண (வளர்ந்து தேய்ந்து) மாறி வருகிறது."

“ஆகவே, உன் தயவை நாடிவருவோர் எவராயினும், அவர் வலிந்தோராயினும்சரி, மெலிந்தோராயினும்சரி, எல்லாரிடமும் அன்பிணக்கமுள்ளவனாயிரு. பிறருக்கு என்றும் உதவாமல் தனக்கென வாழும் கயவர்கள் உனக்கு எதிரிகளாயிருக்கட்டும்."

நலக்கிள்ளி மறைவுற்றபின் கிள்ளிவளவன் சோழ

அரசிருக்கை ஏறினான். ஆயினும் அவன் உரிமை சோழர் குடிக்குரிய மற்ற இளவரசர்களின் எதிர்ப்புக்காளாயிற்று. அவர்களில் ஒன்பதின் மருக்குக் குறையாதவர்கள் கிளர்ந்தெழுந்து நாட்டைத் துண்டாட விருந்தனர். ஆனால் கிள்ளிவளவனின் மைத்துனனான செங்குட்டுவன்சேரன் ஒன்பதின்மரையும் ஒருசேர நேரிவாயிலில் முறியடித்துக் கிள்ளிவளவன் ஆட்சியுரிமையை நிலை நாட்டினான்28