பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

135

யுடையவனானான். அவன் அவர்கள் போக்குகளைக் கூர்ந்து கவனித்து வந்தான். ஒன்றுபட்டுச் செயலாற்றவோ, தன் நாட்டினுள் புகுந்து நிலங்களை அழிவு செய்யவோ அவர்களுக் வாய்ப்பளிக்காமல் அவன் துணிந்து அவர்கள் சந்திப்பிடமாகிய தலையாலங் கானத்திலேயேசென்று அவர்களைத் தாக்கினான்.

திடுமெனக் தாக்கப்பட்டாலும், நேசப்படைகள் வீறுடன் போரிட்டன. போர் ஒரு முழுப்பகலும் மும்முரமாக நடை பெற்ற பின்னரே பாண்டியன் அவர்களைக் களத்திலிருந்து துரத்த முடிந்தது. தமிழகத்திலுள்ள எல்லா மன்னரும், தலைவர்களும் அவர்கள் படைகளின் பொறுக்கியெடுத்த உயிர்ப்பகுதிகளும் இப்போரில் ஈடுபட்டன. இக்காரணத்தினாலேயே, பாண்டியன் இதில் அடைந்தவெற்றி அக்காலத்தின் தலைசிறந்த வீரச் செயலாகக் கருதப்பட்டது. அவன் குடிகள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை. அவன் அரசவையில் புலவர்களும், பாணர்களும் வந்து குழுமி, அந்நாளைய தலைசிறந்த வீரனென்று அவனை வாயாரப் புகழ்ந்தார்கள்.

இதன்பின் பாண்டியன் தானே நேரடியாகச் சேர நாட்டுக்குள் ஒரு படையெடுப்பு நடத்தினான். தனிப்பட்ட கண்ணின் வடிவமைதி காரணமாக யானைக்கண் என்றழைக்கப்பட்ட மன்னன் சேய் சிறைப்பிடிக்கப்பட்டான். சேரன் சிறையிலிருந்து தப்பியோடினான். நெடுஞ்செழியன் அவனை மேல்கடற்கரைவரை துரத்திச்சென்று முசிறி நகரருகில் அவனை மீண்டும் தோற்கடித்தான்". சேரனின் கீழ் ஆண்ட தலைவனான அழும்பில்வேளின் ஆட்சிப் பகுதி அவனிட மிருந்து பறிக்கப்பட்டது.!"

பாண்டியன் குட்டநாட்டுத் தலைவர்களை வென்று அந் நாட்டையும் தன் அரசுடன் சேர்த்துக்கொண்டான். 'துளுவர்' என்ற மரபினரிடமிருந்து முத்துவெள்ளில் என்ற கடல் துறைமுகத்தையும், நாகர்களிடமிருந்து (மன்னர் குடாவிலுள்ள) சாலியூர் என்ற பெயர்பெற்ற வாணிகக்களத்தையும் வென்றான்.

இரண்டாம் நெடுஞ்செழியன் கரிகாலன் மாள்வுக்குச் சில நாள் முன்னர்த் தவிசேறினான். தலையாலங்கானத்து வெற்றிக்குப் பின் அவன் அப்பெருஞ்சோழனுடன் நட்புறவு கொண்டிருந்தான். காவிரிப்பட்டினத்துக் காரிக்கண்ணன் பாடல் இதனைக் காட்டு