பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

145

இதனையடுத்துச் சில நாட்களுக்குள் சோழர் தவிசு கரிகால சோழனின் பெயரனும் செங்குட்டுவன் சேரனின் மைத்துனனு மான கிள்ளிவளவனுக்கு உரிமையாயிற்று. சோழ இளவரசர் ஒன்பதின்மர் அவனுக்கெதிராகக் கிளர்ந்தெழுந்தனர். செங்குட்டுவன் ஒன்பது இளவரசரையும் நேரிவாயில் என்னுமிடத்தில் முறியடித்துத் தன் மைத்துனன் அரசுரிமை காத்தான்.

இதன்பின் அவன் பாண்டி நாட்டின் தென்பகுதியில் ஆண்ட பழையன்மாறனின் தலைநகரான மோகூரைத் தாக்கினான். பழையன் மாறனால் தீங்குக்கு ஆளான அறுகை என்ற தலைவனுக்காகவே அவன் இந்த நடவடிக்கையிலீடுபட்டான்". பதியிழந்த தாய் சோணை கங்கை நீராடுவதற்காக அவன் வடதிசை சென்றான்.பல ஆண்டுகள் கழித்துப் புதுமைவாய்ந்த சூழ்நிலையில் அவன் மீண்டும் கங்கை செல்லவேண்டி வந்தது. அந்நிகழ்ச்சி சிலப்பதிகாரத்தில் கீழ்வருமாறு விரித்துரைக்கப்பட்டுள்ளது":-

66

'வானவர்கோன் கோதை கூர்வாள் ஏந்தியவன். கடல் சூழ்ந்த கடம்பு எறிந்தவன். இமயமலையிலுள்ள வானவர் கண்டு வியக்கும் படி தன் விற்கொடியை இமயமலைமீது பொறித்தவன்.”

"ஒருநாள் அவன் தன் அரசியுடன் வெள்ளிமாடத்தே வீற்றிருந்தான். அப்போது அவன் பசுங்காடுகள் நிறைந்த மலைகளைக் காணச்சென்றான். அம்மலைகளின்மீது முகில்கள் நீங்காது தங்கின. அதன் அருவிகள் இடைவிடாது இன்னோசை யுடன் ஆரவாரித்தன. அவனுடன் பூஞ்சோலைகளில் ஆடி விளையாடும் எண்ணங்கொண்ட வானவர் மகளிர் பலர் வஞ்சி நகரிலிருந்து சென்றிருந்தனர். அனைவரும் பெரியாற்றின் கரையிலிருந்த ஒரு மணற்குன்றின் மீது தங்கினார்கள்.”

"பெரியாறு இவ்விடத்திலேயே மலைகளைவிட்டிறங்கித் தாழ் நிலங்களை நோக்கிப் பாய்கிறது. அதன் நீர் பரவிச் சிறு தீவுகளையும், சோலைகளையும், மாடகூடங்களையும், அம்பலங் களையும், அளாவிச் சென்றது. இங்கிருந்து அரசன் சுற்றியுள்ள அழகிய காட்சிகளைக் கண்டு மகிழ்ந்தான். ஆறு தன் பரப்பின்மீது பல்வகை மலர்களை ஏந்திக்கொண்டு சென்றது. மலைக்குறவர் ஆடல்பாடல்கள் கண்டு மன்னனும் மங்கையரும் மகிழ்ந்தார்கள்.