146
66
அப்பாத்துரையம் - 26
'காட்டு யானைகளைக் குழிப்பொறியில் வீழ்த்தியும், தேன் கூடுகளைக் கிழித்தும் வேடர்கள் செய்த ஆரவாரமும், அருவியின் ஆர்ப்பரிப்பும், யானைகளின் பிளிறலும், அரசனுடன் வந்த வீரர்களின் கவசங்களின் சலசலப்பும் சேர்ந்து அவர்கள் செவிகளில் ஒலித்தவண்ணம் இருந்தன.”
“அரசனும் அவன் துணைவரும் இவ்வாறு இன்புற்றிருந்த வேளையில் வேடர்கள் யானையின் வெண் தந்தங்கள், மணங் கமழும் அகில் கட்டைகள், கவரிமயிர் விசிறிகள், தேன் குடம், சந்தணக் கட்டைகள், சாதிலிங்கம், வீரம், கெந்தக அஞ்சனக்கல், ஏலக்காய், மிளகுக்குவைகள், கூவல்கிழங்கு மாவு, இனிய கவலைக் கிழங்குகள், தேங்காய், மாம்பழம், பலாப்பழங்கள், பசுந்தழை, உள்ளி, கரும்பு, தழைக்கொடி மாலைகள், பாக்கு, வாழைக் குலைகள், சிங்கக் குருளைகள், யாளிக்குருளைகள்; புலிக்குட்டிகள், யானைக்கன்றுகள், குரங்குக் குட்டிகள், கரடிக்குட்டிகள், மலை யாடுகள், மலை மான்கள்; கத்தூரிமான் குழவிகள், கீரிகள், மயில்கள், புனுகுப்பூனைகள், காட்டுக் கோழிகள், கிளிகள் ஆகிய வற்றைச் சுமந்தவண்ணம் அவனைக் காண வந்தனர்.
66
""
'மலை வளங்களான தங்கள் விளைபொருள்களைக் காணிக்கையாக அவன்முன் வைத்து அவர்கள் வணங்கி வாழ்த்தினார்கள்.”
“வாழ்க, நீடு வெற்றியுடன் வாழ்க, அரசே!”
“எழுபிறப்பும் நாங்கள் தங்கள் குடியுரிமையுடையோம்."
“காட்டிலே வேங்கை மரத்தின் நிழலிலே ஒரு மார்பகமிழந்த அழகார் அணங்கு ஒருத்தி தனியே கிடந்து துன்புற்று உயிர்நீத்தாள். அவள் எந்நாட்டினள். எக்குடியினள் என்று யாம் அறியோம்."
“பன்னூறாயிரம் ஆண்டுநீ அளுதி, அரசே!”
“மன்னனுடனிருந்த இன்தமிழ் ஆசான் சாத்தன் மன்னன் நலமார்ந்த காட்சி கண்டு மகிழ்ந்து, மன்னனுக்கும், மன்னரசிக்கும் துயரார்ந்த அவ்வணங்கின் வரலாறு கூறினான்."
“அவன் உரைத்தாவது.”