அப்பாத்துரையம் - 26
(148) || தீயில் அழிக என்று வரங்கோரினாள். இதன்படி அரண்மனையும் நகரின் ஒரு பகுதியும் தீக்கிரையாயின”
க
“அவள் இதன்பின் மதுரையை விட்டகன்று மேல் திசை வழியாகச்சென்று சேரநாடடைந்து அங்கே மாண்டாள்."
"செங்குட்டுவனும் அவன் அரசியும் இவ்வரலாறு கேட்டு மிகவும் உருகினர். அவப்பேறுற்று கற்புடைய அந் நங்கை தெய்வமாக வழிபடுவதற்குரியவள் என்று அரசி குறித்தாள்.”
“மன்னன் இக் கருத்தை ஏற்றான். தன்னைச் சூழ்ந்திருந்த அறிவாளரை நோக்கி அவர்கள் அறிவுரை கோரினான். பொதிய மலையிலிருந்து ஒரு கற்சிலை பெயர்த்துருவாக்கி, அதைக் காவரியில் நீராட்டலாம் அல்லது இமய மலையிலிருந்து கற்சிலை பெயர்த்துருவாக்கிக் கங்கையில் நீராட்டலாம் என்று அவர்கள் கருதினார்கள்.”
"பொதியத்தில் கல்லெடுத்துக் காவிரியில் நீராட்டுவது மறக்குடியில் வந்த தன்போன்றவர்க்கு அழகல்ல என்று மன்னன் சாற்றினான். னான். இமயமலையிலிருந்தே கல்கொணருவதென்று துணிந்தான்.”
"அவன் அமைச்சன் வில்லவன்கோதை அவனை நோக்கி இவ்வாறு கூறினான்.”
“பல்லாண்டு வெற்றியுடன் வாழ்வீராக, அரசே!”
"கொங்கு நாட்டுப் போர்க்களத்தில் தோற்றோடிய உன் மாற்றரசர்கள் தங்கள் புலிக்கொடியையும் மீன் கொடியையும் துறந்துவிட்டுச்சென்றுள்ளனர். உம் வெற்றியின் புகழ் உலகெங்கும் பரந்துள்ளது.”
"உம் அன்னையாராகிய அரசியர் கங்கை நீராடிய சமயம், தாம் கொங்கணர், கலிங்கர், கருநாடர், பங்களர், கங்கர், கட்டியர், வடவாரியர் ஆகியோர் கூட்டுப்படைமீது தாக்கிய வெற்றித் தாக்குதலை என் கண்கள் என்றும் மறக்கமாட்டா."
"ஆகவே தெய்வச் சிலைக்குக் கல் பெறும்படி இமய மலைக்குச் செல்வது தம் விருப்பமாயின், அது பற்றிய செய்தி எழுத்து மூலம் வடபுல அரசருக்கு அனுப்பப்படுதல் நன்று என்றான்.