150
66
அப்பாத்துரையம் - 26
வானகமனைகள் பன்னிரண்டையும், கோளினங்கள், மீனினங்கள், நிலைகளையும் வான்கணிப்பின் ஐந்து உறுப்புக் களையும் உள்ளடக்கிய வானூலுணர்ந்த தலைமக்கணி எழுந்து பேசினான்:"
"வல்லமை பொருந்திய வேந்தே! வெற்றி என்றும் நினதாகுக! திசையில் இந்தக் கணமே புறப்படத் திருவுளங்கூருதி யானால், உன் மாற்றரசர்களனைவரும் வந்து அடிவீழ்வர்" என்றான்.
66
“இதுகேட்டு மன்னன், தன் மன்னுரிமை வாளும், கொற்றக் குடையும், வடதிசை செல்க எனக் கட்டளையிட்டான்.”
"மறவர் மகிழ்ந்து ஆர்ப்பரித்தார்கள். பெரு முரசங்கள் முழங்கின. கொடிகள் பறந்தன. ஐம்பெருங்குழுவினரும், எண் பேராயத்தாரும், குருமாறும், கணிமாறும், முறைவரும் அமைச்சரும், ஒருங்குகூடி, ‘மன்னன் வாழ்க' என்று வாழ்த்தினர். பூமாலைவேய்ந்த மன்னுரிமை வாளும், கொற்றக்குடையும் மன்பேருரிமையுடன் அரச யானைமீது ஏற்றி நகர்ப்புறத்திலுள்ள ஒரு கோட்டைக்குக் கொண்டுசெல்லப்பட்டன.'
“திருவோலக்க மன்றமேறி மன்னன் இதன்பின் தன்படை த் தலைவர்களுக்கும் அரண்மனை வாயில் தலைவர்களுக்கும் விருந் தாட்டளித்தான். அதன்பின் தலைமீது வஞ்சிமாலையணிந்து புறப்பாட்டான். திருமால்கோயில் சென்று வழிவாடு செய்தபின் அவன் தன் யானை ஏறினான். கோயில் குருவிடமிருந்து சிவ பெருமான் திருவடிச் சின்னம் பெற்று அதனைப் பற்றார்வத்துடன் தன் தலையிலும், தோளிலும் அணிந்தான். பொற்கோயிலிலுள்ள திருமாலின் கோயில்குரவர் நல்வாழ்த்துடன், காலாள், குதிரை, தேர், யானை ஆகிய நாலுறுப்புக்களமைந்த படை புடைசூழ, படைத்தலைவர் துணைவர, வெண்கொற்றக் குடை நிழலின்கீழ் யானைமீதமர்ந்து மன்னன் வஞ்சியைவிட்டுப் புறப்பட்டான்.”
"அவன் நீலகிரிக் குன்றுகளில் முதல் தங்கல் அமைத்தான்.”
இந்த நீலகிரி தற்கால நீலகிரியாய்த் தோன்றவில்லை. அது ஒரிசா மாகாணத்தில் பலசோர்2 அருகில் வங்கவிரிகுடாவிலிருந்து 16 அல்லது 18 கல்தொலைவில் செங்குத்தாக நின்ற ஒரு மலை.