(152) ||.
---
அப்பாத்துரையம் - 26
கங்கைப் பேரியாறு கடந்து என்படைகள் செல்லும்படி ஒரு கப்பற்படையை அவர் திரட்டி வைக்கக் கடவர்!”
“சஞ்சயனை அனுப்பிவிட்டு, அரசன் மெய்க்காவலர் ஆயிர வரையும் தன் கொலுவிருக்கையில் வர இசைவளித்தான். அவர்களி டமிருந்து மணமிக்க சந்தணக்கட்டைகளும் முத்துக்களுமடங்கிய திறையை ஏற்றான்.”
"பின் தங்கல் கலைத்து மன்னன் படையுடன் கங்கைக் கரையை அடைந்து, கர்ணர்கள் திரட்டித் தந்தகப்பற்படையின் உதவியால் அவ்வாற்றைக் கடந்தான்"
66
'வடகரையில் கர்ணர்களே வந்து மன்னனை வரவேற்றனர். அவர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு சேரன் பின்னும் வடக்கேயுள்ள உத்தரை நாடு சென்றான்”
"இங்கே குயிலாலுவம் என்ற இடத்தில் கனகன், விசயன் ஆகிய ஆரிய அரசரும், அவர்கள் நேச மன்னரான உத்தரன், விசித்திரன், உருத்திரன், பைரவன், சித்திரசிங்கன், தனுத்தரன், சுவேதன் ஆகியவர்களும் நடத்திய படையைச் சந்தித்தான்.”
"ஆரிய அரசரின் மாபெரும் படையைக் கண்ட சேர அரசன் கழிபேருவகை எய்தினான். முரசு முழங்க, சங்கம் இயம்ப, காளங்கள் ஆர்ப்பரிக்க அவன் படை நடத்தித் தாக்கினான். வில் வீரர்களும் வாள் வீரர்களும் நீடித்து மும்முரமான போரில் ஈடுபட்டார்கள். படுகளம் அச்சந்தரும் குருதிக்களமாயிற்று."
"நிலமுழுவதும் இறந்துபட்ட வீரர் உடல்களும், குதிரை யானை ஆகியவற்றின் உடல்களும் நிரம்பிக்கிடந்தன. போர் முடிவில் தமிழர் எதிரிகளனைவரையும் துரத்தியடித்தனர்.”
“கனகனும், விசயனும் மற்றும் பல அரசரும் செங்குட்டு வனிடம் சிறைப்பட்டார்கள்.
66
“கனகன் விசயன் ஆகியோர் மன்னுரிமை உடைகளைச் சேரன் ஆண்டி உடையாக மாற்றும்படி செய்தான். பின் அவர்களைத் தன் அமைச்சன் வில்லவன் கோதையுடனும் காவற்படையுடனும் இமயத்துக்கு அனுப்பினான்.”
போர் முடிவுற்றபின் மன்னன் கங்கையின் தென்கரைய டைந்தான். அங்கே ஓர் அழகிய பூங்காவினருகில் கர்ணர்கள்