பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

163

ஆரவாரத்துடன் விழும் முள்ளூர் மலையின் வீறுடைக் கோமானே!'

“உன்னையும் உன் குடிமரபையும் பாடி உன் பெயரை இறவாப் பெயராக்கியுள்ள அறிவார்ந்த பார்ப்பனனைவிட (கபிலனைவிட) அறிவிற் சிறந்தவன் உலகில் இல்லை. அவன் பாட்டின் சிறப்புக்குப்பின் மற்றப்பாணர் உன்னைப் பாடுவதற்கு வழியற்றவராய்விட்டார்கள்.”

66

'வானவன் (சேரன்) கரைக்குத் தங்கம் சுமந்துவரும் கப்பல்கள் உலவும் மேலைக் கடலிலே வேறு எந்த மரக்கலமும் செல்ல முடியாது அதுபோல (கபிலர் பாடிய) உன்னைப் பாடவகை யறியாது திகைக்கின்றோம்.”

"யானைகளுடனும், இடியென முழங்கும் முரசங்களுடனும் போர்செய்யவந்த மாற்றரசர்களைச் சிதறடித்த பெண்ணைத் தீரத்தின் காவல! வறுமையால் உந்தப்பட்டு, உன் புகழால் ஈர்க்கப் பட்டு உன் அருள்நாடி வருகின்றோம்."

காரி கொல்லிமலைத் தலைவன் ஓரியுடன் போருடற்றினான். அவனைப் போரில் கொன்று, கொல்லிமலையை அதன் நேரிய உரிமையாளனான சேரனுக்கே தந்தான். மற்ற வேளிர்களை வென்ற வெற்றிகளால் எக்களிப்புற்று அவன் தனியுரிமையுடன் அரசாள எண்ணி முடியணிந்துகொண்டதாகத் தெரிகிறது. இதனாலேயே அவன் ‘திருமுடிக்காரி' அதாவது முடியேற்ற காரி என்றழைக்கப்பட்டான்.

முடியேற்ற சில நாட்களுக்குள் அவன் தலைக்கனத்தை அடக்க எண்ணிய சோழ அரசன் ஒரு பெரும்படையுடன் மலாட்டின்மீது படையெடுத்து வெங்குருதிப் போரொன்றில் காரியை முறியடித்துக்கொன்றான்.

குடிமரபை அழித்துவிட

சோழன் காரியின் புதல்வர்களைக் கொன்று மலையமான் எண்ணியிருந்தான். ஆனால் கோவூர்கிழார் என்ற புலவரின் இடையீட்டினால் அவர்கள் உயிர்கள் காப்பாற்றப்பட்டன?

ங்ஙனம் மாள்விலிருந்து காப்பாற்றப்பெற்ற காரியின் புதல்வன் கண்ணன் தன் வாழ்வல் சோழ அரசனுக்குச் செய்த