164
அப்பாத்துரையம் - 26
கைம்மாறு சிறிதன்று ஏனெனில், சில ஆண்டுகளுக்குள்ளேயே சோழன் எதிரிகளால் மிகவும் நெருக்குண்டு தலைநகரை விட்டோடி அணூகமுடியா உயரமுடைய முள்ளூர் மலையில், தன் குடிமன்னன் கண்ணன் ஆட்சிப் பகுதியிலேயே அடைக்கலம் புகவேண்டி வந்தது.
தந்தையைப்போலவே வீரஞ்செறிந்த கண்ணன் மன்னர் ஆதரவாளரின் உளச்சோர்வகற்றிக் கலைந்த படைகளையும் திரட்டினான். எதிரிகளை மீட்டும் எதிர்த்து முடியடித்துச் சோழன் வலிமையை மறுபடியும் நிலைநாட்டினான். இந்நன்றி மறவாது சோழமன்னன் கண்ணனையே தன் அமைச்சனாக்கி அவனுக்குச் சோழிய ஏனாதி என்ற உயர்பட்டம் வழங்கினான்.
மிழலைக் கூற்றத்தைச்சேர்ந்த புகழ்சான்ற தலைவன் மாவேள் எவ்வி. அவன் வேளாளர் மரபினன். அவன் குடிமரபு ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட அந்நாளில்கூடப் பழமை சான்றது என்று கருதப்பட்டது". அவன் ஆட்சிப் பகுதி காவிரி யாற்றின் தென்பகுதியிலிருந்தது. அது நெல்லும் கரும்பும் விரிவாகப் பயிராகிய வளமிக்க கழனிகள் நிரம்பிய நாடு.
அவன் வள்ளன்மையின் பயனில் பங்குபெற்ற ஒரு புலவர் அவனைப்பற்றி இவ்வாறு கூறுகிறார்.
"அவன் மாளிகை அடையாத வாயில் உடையது. விருந்தினர் பலரோடன்றி அவன் என்றும் உணவுண்ண அமர்ந்ததில்லை.”12
அவன் நாட்டை ஆலங்கானம் வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனின் படைத்தலைவர்களுள் ஒருவனான அதுகை படையெடுத்தான். எவ்வி தன்படைகளின் தலைமையில் வீரமாகப் போர்செய்து, போரில் பெற்ற புண்களால் மாண்டான்.13
எவ்வியின் உறவினனான வேள்பாரி பறம்பு என்ற ஒரு சிறு நிலப்பகுதியின் தலைவன். ஆனால் புலவர்களுக்கு ஆதரவளித்த மாபெரும் புரவலன் என்ற முறையில் தமிழ் மொழியுள்ளளவும் அவன் பெயர் தமிழர் நினைவில் மங்காமல் நிலைபெறத்தக்கது. எவ்வியின் வீழ்ச்சிக்குப்பின் பாரி உயர்ந்த பறம்பு மலையையும் அதனைச் சூழ்ந்த நிலங்களையும் கைக்கொண்டு மூவரசர்களில்