பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

165

எவரையும் மேலாளாக ஏற்காமல் தனியாட்சியாளனாக நடக்கத் தொடங்கினான்.

அவன் தங்கு தடையற்று அருஞ்செயல் வேட்டத்தில் முனைந்த வீரமறவன். அதே சமயம் கவலையற்ற இன்ப வாழ்வினன். தூய உள்ளமும் வள்ளன்மையுமுடையவன். கவிதையில் அவன் ஆர்வம் பெரிதாயிருந்தது. நாடோடியாக வந்த ஒவ்வொரு பாணனும் அவன் அரண்மனையில் அன்புடன் ஆதவு பெற்று விருந்தளிக்கப் பெற்றான்.

அஞ்சா நெஞ்சம், வள்ளண்மை, எந்த இடரிலும் கலங்காது மகிழ்ந்து நிற்கும் வீறுவகை-கவிஞர்கள் தம் பாட்டுடைத் தலைவனுக்கு இருப்பதாகப் புகழ்ந்து பாடும் பண்புகள் ஒன்று குறையாமல் அவனிடம் இணைந்திருப்பதை அவர்கள் கண்டார்கள். பாரியின் இப்பண்புகளைக் கவிதை மொழிகளில் புகழ்ந்தும் அவன் கொடைத்திறத்தை வியந்து பாராட்டியும் சேர சோழ பாண்டியர் அவைக்களங்களிலேயே புலவர்கள் பாடினர். இது மூவரசர் பொறாமையைக் கிளறிற்று. அவர்கள் பறம்பு மலைய முற்றுகை யிடத் தம் படைகளை அனுப்பினார்கள்.

பாரியின் துணையாட்களுக்கு மலைக்கணவாய்களின் மேடுபள்ளங்கள் யாவும் நன்கு தெரிந்திருந்தன. அவற்றை அவர்கள் திறம்படக் காத்துவந்தார்கள். போரில் இரு திறங்களின் ஏற்றத்தாழ்வு பெரிதாயிருந்தாலும் சில நாட்கள் பாரி படைக்கல வாய்ப்பிலும் தொகையிலும் மிகவும் மேம்பட்ட எதிரிகளைத் தன் தனி வீரத்தால் காத்து நின்றான். ஆனால் இறுதியில் எதிரிகள் படிப்படியாக மலைமீது போரிட்டு முன்னேறி, பாரியை முறியடித்துக் கொன்றனர்.4

பாரியின் கெழுதகை நண்பரான கபிலர் கபிலர் மூவரசர் படைகளும் பறம்பை முற்றுகையிட்ட சமயம் கீழ்வரும் பாடல்களைப் பாடினார்.

"மூவரசரும் தம் ஒன்றுபட்ட படைகளுடன் முற்றுகை யிட்டாலும், பறம்புடிலையை வெல்வது அரிது. வளமிக்க பறம்பு நாட்டின் ஊர்கள் முந்நூறு உண்டு. முந்நூறும் இப்போது புலவர் களுக்கு உரியன. நானும் பாரியும்தான் இங்கே இருக்கிறோம். எங்கள் பறம்புலையும் இதோ இருக்கிறது.பாணராக எங்களைப் பாட வருவீரானால், வாருங்கள்."

9915