(170
அப்பாத்துரையம் - 26
காண்டிருந்த அச்சம் குறித்துக் கீழ்வரும் பாடலில் விரித்துரைத்துள்ளார்:-
66
எதிரிகளின் கோட்டைகளைத் தாக்கி முனை மழுங்கிய தந்தங்களையுடைய உன் யானைப்படைகளைக் கண்டவர்கள் தங்கள் கோட்டை வாயில் கதவுகளைப் பிணிக்கும் வல்லிரும்புக் கம்பிகளைப் புதுப்பிக்கின்றனர். காலடியில் துவைத்தழித்த எதிரிகளின் குருதி தோய்ந்த குளம்புகளையுடைய உன் குதிரைப் படைகளைக் கண்டோர் தங்கள் கோட்டைவாயில்களுக்குத் திண்ணிய முள் மரக்கட்டைகளால் வாயில் வழியை அடைக்கப் பார்க்கின்றனர். வாள்புண் ஏற்ற தழும்புகள் பல தாங்கிய உடல் களையுடைய ய உன் கொடுஞ்செயல் வீரர்களைக் கண்டோரெல்லாம் தம் அம்புத்தூணியிலுள்ள அம்புகளை வீணாக்காது பேணுகின்றனர்.”
ஆனால்நீயோ, தம் கோட்டைவாயிலின் உள்ளே உன் படைகளைத் தடுத்து நிறுத்துவதற்காக உன் எதிரிகள் அதன் முன் எரிக்கும் ஐயவியின் நச்சுப்புகையைப் பொருட்படுத்தாமல் முன்னேறிக் கூற்றுவன்போல அவர்களைக் கைப்பற்றி மாய்க்கிறாய்.
"அந்தோ, அலையாடும் கதிர்மணிகள் நிறைந்த வயல் களையுடைய உன் எதிரியின் நிலங்களை இனிப் பாதுகாப்பவர் யார்?”
அடிக்குறிப்புகள்
இயல் 8. வேளிரும் குடிமன்னரும்
பெரும்பாணாற்றுப்படை.
1.
2.
அகம் 294,310,358
3.
புறம் 175,389.
4.
அகம் 35.
5.
'ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்’.
6.
புறம். 122
7.
புறம் 126.
8.
அகம் 208.