பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(174)

அப்பாத்துரையம் - 26

சேர, சோழ,பாண்டியராகிய மூன்று அரசர்களும் ஒருவரை ஒருவர் சாராத தனியரசரானாலும், மூவரசுகளிலும் தே முறை தான் கையாளப்பட்டதென்பது குறிப்பிடத்தக்க செய்தி ஆகும். ஆகவே மூவரசுகளையும் நிறுவியவர்கள் தென்னாட்டில் வந்து குடியேறுமுன் வாழ்ந்த மூலத் தாயகமாகிய மகதப்பேரரசிலிருந்த முறையையே இங்கும் கொண்டுவந்து பின்பற்றினர் என்று கருத இடமுண்டு.

அரசன் திருமுன்பும் அரச சூழலும் பெருமதிப்புக்கும் புகட்டாரவாரத்துக்கும் உரியனவாயிருந்தன. பெருந்தொகை யான பணிமக்கள் அவனுக்கு ஊழியம் செய்தனர். அவர்களே அடிக்கடி எண்பேராயங்கள் என்றழைக்கப்பட்டனர். அவர்கள் விவரம் வருமாறு:-

மணப்பொருளாளர், மாலைக்காரர், அடைப்பக்காரர், பாக்குப்பணியாளர், கவசக்காரர், ஆடையணி புனைவோர், பந்தமேந்திகள், மெய்காவலர்.

அரசன் மணிகள் பதிக்கப்பெற்றுப் பொன்னாலான முடி அணிந்திருந்தான். கைகளில் பொன் காப்புக்களும் வலது காலில் தங்கக்கழலும், கழுத்தில் முத்து அல்லது மணிமாலையும் அவனால் அணியப்பட்ட அணிமணிகள். முத்துக்கோவைகளில் ஒப்பனை செய்யப்பட்ட சீரிய குடை ஒன்று, அவன் அரண்மனை யில் தவசிலமர்ந்திருக்கும் சமயத்திலும் அரண்மனைக்கு வெளியே போகுமிடங்களிலும் அவன் தலைக்கு நேராகப் பிடிக்கப்பட்டன.

பொதுவாக அரசன் யானைமீதோ, குதிரைமீதோ, நாலு குதிரைகள் பூட்டிய தேரின்மீதோ இவர்ந்து சென்றான். காலையிலும் மாலையிலும் அரண்மனை வாயிலில் பெரிய முரசங்கள் முழங்கின. நாழிகை வட்டில்களால் கணக்கிடப்பட்ட ஒவ்வொரு நாழிகை முடிவையும் அறிவிப்பதற்கென்று று அரண்மனையில் நாழிகை வாணர் அமர்வு பெற்றிருந்தனர்.4

அரசிக்கும் அவள் பணிப்பெண்டிருக்குமாக அரண்மனை யில் ஒரு தனிப்பகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. அரசுரிமையை அவள் தன் வழியுரிமையாகக் கொண்டிருந்தாலன்றி அவள் முடி அணிவதில்லை. எல்லா மன்னுரிமைப் பொது அமயங்களிலும்