பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




178

அப்பாத்துரையம் - 26

தொழிலுக்காக அதைத் தேக்கிவைப்பதில் அவர் களுக்கிருந்த திறத்தைக் காட்டின.

சேர சோழ பாண்டிய அரசர்களும் தமிழக வேளிரில் பெரும்பாலானவர்களும் இந்த வேளாளர் மரபைச் சேர்ந்த வர்களே. சிறிதளவே நிலமுடைய ஏழை வேளாளர் குடியினர் பொதுவாக 'வீழ்குடி உழவர்' அல்லது வீழ்ச்சியடைந்த வேளாளர் எனப் பட்டனர். மற்ற வேளாளர்கள் செல்வக் குடியினர் என்பதையே இது குறித்திருக்கக்கூடும்.20

பெரும்புகழ்க் கரிகாலன் அருவாளரை வென்று அவர்கள் நாட்டைத் தன் அரசுடன் சேர்த்துக்கொண்டபோது, அவன் வென்ற நாடுகளைத் தன் வேளாளர் தலைவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தான். இத் தலைவர்களின் வழிவந்தவர் இன்றும் தங்கள் நிலங்களுடன் அரசியலாரின்கீழ்2 நேரடியான உரிமைபெற்ற வராய் சிறுநிலக் கிழாராக வாழ்கின்றனர்23. இன்றும் அவர்கள் முதலிகள் அல்லது முதல் வகுப்பினர் என்றே அழைக்கப்படு கின்றனர்.

வடுகம் அல்லது தற்காலத் தெலுங்கு நாட்டை வென்ற வேளாள குடியினர் வேளமர் என்றழைக்கப்பட்டனர். அங்குள்ள பெருநிலக்கிழார் இன்றும் இன்னும் இவ்வேளமர் வகுப்பினரே.

கன்னட நாட்டில் இவ்வேளாளர் பெள்ளாளமரபை நிறுவிப் பல நூற்றாண்டுகளாக நாடாண்டனர்.

வேளாளர்களுக்குக் கங்ககுலம் அல்லது கங்கவம்சம் என்ற பெயரும் உண்டு. ஏனெனில் அவர்கள் பிளினி, டாலமி ஆகியவர் களால் குறிப்பிடப்பட்ட கங்கைத் தீரத்திலுள்ள வல்லமைவாய்ந்த கங்கரிடே என்ற மாபெருங்குடி மரபிலிருந்து தங்கள் குலமரபை வரன்முறையாகக்கொண்டனர்.

வேளாளர்களே பெரும்பாலும் நிறைந்த மைசூரின் ஒரு பகுதி கி.பி.10,11-ஆம் நூற்றாண்டுகளில் கங்கவாடி என்றழைக்கப் பட்ட து.

இம்மரபைச் சேர்ந்த மற்றொரு குடிவழி கங்க வம்சம் என்ற பெயருடன் 11,12-ஆம் நூற்றாண்டுகளில் ஒரிசாவை ஆண்டது.