180
அப்பாத்துரையம் - 26
ஆயர்களும் வேடர்களும் மூன்றாம் வகுப்பினர். அவர்கள் தங்கள் கால்நடைகளைப் பேணியும் கூடாரங்களில் தங்கியும் நாடோடி வாழ்வு வாழ்ந்தனர். அவர்கள் கால்நடைகளையே வரியாகத் தந்தனர். வயல்களில் விதைத்த பயிர்களை அழிக்கும் பறவைகளையும் விலங்குகளையும் அகற்றி நிலத்தைப் பாதுகாப் பதற்காக அரசனிடமிருந்து அவர்கள் படி நெல் பெற்றனர்.
நான்காம் வகுப்பு தொழில் வகுப்பு. பொருள்கள் வாங்கி விற்றல், கூலிவேலை செய்தல் அவர்கள் வேலை. படைக்கலத் தொழிலாளரும் கவசத் தொழிலாளரும், எல்லாவகைப்பட்ட கலைத்தொழிலாளர்களும் இப்பகுப்பினர்.
போர் வீரர் ஐந்தாம் வகுப்பாயினர். அவர்கள் அரசன் செலவில் வாழ்ந்தனர். அவர்களுக்குப் படைத்துறை வேலை தவிர வேலை இல்லை. அமைதிக்காலங்களில் அவர்கள் தங்கள் நேரத்தைக் குடித்துச் சோம்பித்திரிவதிலேயே கழித்தனர்.
ஆறாம் வகுப்பு மேற்பார்வை செய்தது, நாட்டிலும் நகரிலும் நடப்பதை ஒற்றறிந்து அரசனுக்கோ தண்டலாளருக்கோ அறிவப்பது அவர்கள் கடமை.
ஏழாவது வகுப்பு தன்னாட்சியுடைய நகர்களில் பொது ஆட்சிக் காரியங்களில் மன்னன் அல்லது தண்டலாளர்களுக்கு அறிவுரை கூறிய மன்றத்தார் அடங்கியதாயிருந்தது.
நாட்டின் பழக்க வழக்கச் சட்டதிட்டங்கள் வகுப்புக்கு வகுப்பு கலப்புமணத்தைக் கண்டித்தது. எவரும் ஒரு வகுப்பிலிருந்து மற்றொரு வகுப்புக்கு மாறவும் இசைவளிக்கப் படவில்லை. எடுத்துக்காட்டாக, ஓர் உழவன் இடையனாக மாறவோ, அல்லது இடையர் வகுப்பு அல்லது கலைத் தொழில் வகுப்பிலிருந்து பெண்கொள்ளவோ முடியாது.
அறிவர் வகப்புக்குமட்டும் இச்சட்டதிட்டம் முழுவிலக் களித்தது. அவர் எந்த வகுப்பினராகவும் இருக்கலாம். ஏனெனில் அவர் வாழ்வு எளிதான ஒன்றல்ல. அத்துடன் அவர்களில் மிகச் சிலரே முன்னறிவின்திறம் வாய்க்கப்பெற்றனர்?7
பண்டை மகதம்பற்றிய மேற்கூறிய வகுப்புப் பிரிவினை விளக்கத்தில் ஒற்றர்களையும் மேற்பார்வையாளர்களையும்