பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

181

அறிவுரையாளர்களையும் தனி வகுப்புக்களாக மெகஸ்தனிஸ் கருதியது தவறு என்பது தெளிவு. மற்ற வகுப்புகளெல்லாம் தமிழரிடையிலும் மகதத்திலும் முற்றிலும் இசைகின்றன.

இதிலிருந்து இரு இனங்களுமே மிகத்தொல் பழங்காலத் திலேயே நாகரிகமற்ற நிலையிலிருந்து விலகி நீண்ட காலமாகக் குடிவாழ்வும் நிலையான ஆட்சிமுறையும் உடையவராய் இருந்தனர் என்றும், பல நூற்றாண்டுகளாகப் போரும் முரட்டுப் பூசலும் அவர்களிடையே இல்லாதிருந்தன என்றும் தெரிய வருகிறது. அவர்கள் நாகரிகம் ஆரியர் நாகரிகத்தைவிட மிகவும் பழமை யானது என்பதில் ஐயமில்லை. ஏனெனில் ஆரியர்களிடையே போர்வீரர்படி குருமார்படிக்கு அடுத்தாயிருந்தது. நேர்மாறாகத் தமிழரிடையே வேளாளரே சமயகுருமாருக் கடுத்தபடியாயி ருந்தனர். போர்வீரர் வகுப்பு அவர்களுக்கு மட்டுமன்றி, ஆயர்க ளுக்கும் உழவுத் தொழிலாளருக்கம் கூடக் கீழ்ப்பட்டிருந்தது.

நாம் குறிப்பிடும் காலத்துக்குக் குறைந்தது ஐந்து அல்லது ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பார்ப்பனர் தமிழகத்தில் குடியேறத் தொடங்கிவிட்டனர். அவர்கள் தமிழர்மீது தங்கள் சாதி வருணமுறையைச் சுமந்த அரும்பாடுபட்டனர்.

நமக்குக் கிட்டியுள்ள மிகப் பழமையான தமிழ் இலக்கணத் தின் ஆசிரியர் தொல்காப்பியர் என்ற ஒரு பார்ப்பனர்.28 அவர்கி. மு.1-வது அல்லது 2-வது நூற்றாண்டுக்குரியவர். அவர் அடிக்கடி அறிவர் அல்லது சித்தர்களைப்பற்றிக் குறிப்பிடுகிறார்.29 ஆனால் சமுதாய வகுப்புக்களைக் குறிக்கும் இயலில் ஆசிரியர் அறிவரைப்பற்றிய பேச்சையே எடுக்கவில்லை. திருநூலணிந்த பார்ப்பனரையே30 முதல் வகுப்பினராகக் குறிப்பிடுகிறார்.31

மிகுந்த திறமை நயத்துடன் போர்வீரரை விலக்கி அரசரை மட்டும் அவர் தெய்விக வகுப்பில் சேர்த்துக்கொள்கிறார். சேர சோழ பாண்டியராகிய மூவரசர்மட்டும் ஒரு வகுப்பாக அமையப் போதியவரென்று அவர் கருதினார் போலும்! வாணிகத்தால் வாழ்பவரே மூன்றாம் வகுப்பு என அவர் குறித்தார். ஆயினும் அரசரோ வணிகரோ திருநூல் அணிந்ததாக அவர் குறிக்கவில்லை!