182
அப்பாத்துரையம் - 26
இதன்பின் அவர் வேளாளரைத் தனியாகப் பிரித்து அவர் களுக்கு உழவல்லது தொழிலில்லை என்று வகுக்கிறார். இங்கும் அவர் வேளாளர் சூத்திரர் என்று குறிக்கவில்லை. ஆயினும் பொதுநிலை வேளாளர் சூத்திரராகக் கணிக்கப்பட வேண்டிய வர்கள் என்ற தொனிபடக் குறிக்கிறார். அதேசமயம் அரசராக அமர்ந்த வேளாளர் க்ஷத்திரியராகக் கருதப்படவேண்டு மென்றும் பிரிக்கிறார்.
தமிழரைத் தங்கள் சாதி வருணமுறைக்குக் கொண்டுவரப் பார்ப்பனர் செய்த முதல் முயற்சி இதுவே. ஆனால், தமிழகத்தில் க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகிய பிரிவுகள் இல்லாத நிலையில் அவர்கள் வெற்றியடைய முடியவில்லை. ஏனெனில் இன்றளவும் தன்னை க்ஷத்திரியன் என்று கூறிக்கொள்ளும் ஒரு படையாட்சியின் வீட்டில் அல்லது தன்னை வைசியன் என்று கூறிக்கொள்ளும் ஒரு வணிகன் வீட்டில் வெள்ளாளன் உணவு கொள்ளவோ குடிக்க நீர்பெறவோ செய்வதில்லை.
தொல்காப்பியர் தம் இலக்கணத்தில் ஆயர் அல்லது இடையரைப்பற்றியும், வேடுவர் அல்லது வேடரைப்பற்றியும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் வகுப்புப் பிரிவுபற்றிய இயலில் அவர் மறவர், வலையர், புலையர் முதலிய வகுப்புக்களைப்பற்றிக் கூறவில்லை.32 ஏனெனில் பார்ப்பனீய சாதிமுறையுடன் முரண் அவர்களைப்பற்றிக்
படாதபடி முடியவில்லை.33
குறிப்பிட
அவரால்
தமிழ்மக்கள் அணிந்த ஆடை சமுதாயத்தில் அவர்கள் படிமுறையையும் அவர்கள் மரபினங்களையும் பொறுத்துப் பல்வகை வேறுபாடுடையது. தூய தனித்தமிழரிடையே நடுத்தர வகுப்பினர் பொதுவாக அரையைச் சுற்றி முழந்தாள்வரை படியும் படி ஒன்றும் தலையைச் சுற்றித் தளர்வாகக் கட்டிய ஒன்றுமாக இரண்டு ஆடைகளே அணிந்தார்கள்.34 அவர்கள், தலைமயிரை வெட்டுவ தில்லை. அதை இயற்கை வளர்ச்சியளவுக்கே வளரவிட்டனர் அல்லது ஒருபுறமாக அதில் ஒரு பெரிய முடியிட்டுக் கட்டினர். இந்தத் தலையின் முடியைக்கட்ட உயர் வகுப்பினர் பளபளப்பான நீலமணிகள் கோத்த நிறமார்ந்த ழைகளைப் பயன்படுத்தினர். இழைகள் குஞ்சம்போல் தொங்கவிடப்பட்டன35