ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்
185
கெட்டிக்காப்புப் பூண்டனர். அரச குடியினரும் சிறுகுடிமன்னரும் இதனுடன் தனிச்சிறப்புப்படக் காலில் கழல் பூட்டினர்.
வேளிர் குடிமகன் ஒருவன் அணிமணி கீழ்வருமாறு வருணிக்கப்பட்டுள்ளது:-
66
ய
'அவன் கால்களில் இரட்டைப்பொன்னிழைப் பின்னலுடன் தொங்கவிடப்பட்ட சிறு மணிகளின் வரிசை வாய்ந்த கழல் கிடந்தது. அவன் அரையைச் சுற்றிப் பொன் காசுகள் நிரை நிரையாகத் தூக்கிய பவளக்கொடி அரைஞாண் தொங்கிற்று. அதன்மீது அவன் இடுப்பில் மிக நேரிய ஒரு மல்மல் ஆடை உடுத்தியிருந்தான். நண்டின் கண்கள்போல அழகுறப் புனையப் பட்ட பின்னல் வேலைப் பாடுடைய அழகிய தோள்வளைகள் தோளை அணி செய்தன. கழுத்தில் தொங்கிய இரட்டைப் பட்டைப் பொற் சங்கிலியிலிருந்து மழு வாள் படைகளின் சிற்றுருக்களும் அதிற்கோத்த எருதின் உருவாய்ந்த ஒரு பதக்கமும் தொங்கின. அவன் தலைமீது முப் புரிகளாக முறுக்கிய முத்துப் பவளங்களாலான தலைமாலையும் அதன்மேல் ஒரு பூமாலையும் ஒளிமிக்க நீலமணிகள்கோத்த இழையால் ஒருங்கு பிணைக்கப் பட்டிருந்தன.
66
48
"தாழ்நிலை வகுப்பினரிடையே மாதர் சங்கு வளைகள், வெண்மணி, நீலமணிகளாலான கழுத்துமாலை, முதலிய மலிவான நகைகள் அணிந்தனர். நடுத்தர வகுப்பினர் பெரும்பாலும் தங்க நகைகளே அணிந்தார்கள். ஏனெனில் இந்தக் காலத்தில் இந்தியாவில் வெள்ளி மிகவும் அரிதான ஒரு பொருள். செல்வரின் நகைகள் மிக விலையேறியதாக இருந்தன. பொது ஆடல்மகளிர் பூண்களே மிகப் பகட்டாரவாரமானவையாய் இருந்தன."
66
‘ஆடல்நங்கை யணிந்த பூண்களைப்பற்றிச் சிலப்பதி காரத்தில் தரப்படும் கீழ்வரும் வருணனை நகையணி மணிவகையில் இருந்த ஆரவார இன்ப வாழ்வைக் காட்டவல்லது."
“அவன் கூந்தலை மணநெய்யில் தோய்த்தாள். அந்த நெய் முப்பத்திரண்டு வகைச் செடிகளிலிருந்தும் ஐவகை மணப் பொருள் களிலிருந்தும் பத்துவகைத் துவர்ப்பொருள்களினாலும் புனைந்தி யற்றப்பட்டது. அகிற்புகையில் கூந்தலை உலர்த்தி பின்