பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(194) ||

அப்பாத்துரையம் - 26

உணவு வட்டித்தமைத்தனர். கடற்கரையில் மீன் படவர் பனை ஒலைப் பட்டைகளில் பொரித்த மீனுடன் சோறிட்டனர்.”

66

'பார்ப்பனர்

மாங்காய் ஊறுகாயுடன் சோறும், மணமுடைய கருவேம்பின் இலையுடன் வெண்ணெயில் வெந்த மாதுளம் பிஞ்சும் தந்தனர். உழவர் அல்லது வேளாளர் இனிய தின்பண்டங்களும், பலாப்பழங்களும், வாழைப்பழங்களும் தேங்காயின் குளிர்ச்சி பொருந்திய நீரும் வழங்கினர். கள்ளுக் கடைகளில் பலநாள் அரிசிமா உணவிட்டுக் கொட்டிலிலேயே தங்கிக் கொழுக்க வைக்கப்பட்ட ஆண்பன்றியின் வறுவலுடன் கள்ளும் வழங்கினர்.

63

தொழிலாளர், படைவீரர், நாடுசூழ்வாணர் ஆகிய ஏழை வகுப்பினர்களால் தென்னையிலிருந்து இறக்கிய கள் பருகப் பட்டது4. செல்வ வகப்பினர் அரிசி, தாதகிப்பூ5 முதலிய மணப் பொருள்களிலிருந்து வடிக்கப்படும் நறுமணப் மூட்டப்பட்ட தேறல் வகையை வழங்கினார்கள்". யவனர் கலங்களில் கொண்டு வரப்பட்டகுளிர்நறுந் தேறல் வகைகள் மிக விலையேறியவையாய் இருந்திருக்கவேண்டும். இவையே மன்னரின் விருப்பத்துக்குரிய குடிவகைகளாய் இருந்தன.7

காடைச் சண்டைகள், ஆடல்பாடல்கள், இசையரங்குகள், சமய விழாக்கள் ஆகியவையே பொதுமக்களின் தலையாய பொழுது போக்குகளாக இருந்தன. மாதர் வள்ளைப்பாட்டும் அம்மானைப் பாட்டும் பாடும்படி கிளிகளுக்குக் கற்பித்தும், ஊஞ்சலில் ஊசலாடியும், தாயம், கழங்கு, பந்து முதலியவை யாடியும் வீட்டில் பொழுது போக்கினர்.

தாயம் என்பது தற்போகைய சொக்கட்டான் ஆட்டமே. ஆனால் சொக்கட்டான்காய்கள் இப்போதிருப்பது போல நீள் சதுக்கமான கட்டைகளாய் இல்லை. கரும்புள்ளியிட்ட நண்டின் தோடுபோலவட்டவடிவமாயிருந்தன.கழங்காடலில் ஒவ்வொன்றும் ருபாக்களவான ஏழு சின்னஞ் சிறு கழல்கள் வழங்கப்பட்டன. ஆடுவோர் உட்கார்ந் திருந்தபடியே கழல்களை ஒன்றொன்றாக, இரண்டிரண்டாக என ஏற்றி ஏழேழ்வரை மேலே எறிந்து விழாது உள்ளங்கையிலோ, புறங்கையிலோ தாங்க முயன்றனர். பந்தாட் டத்தில் கைாயல் தொடர்ந்து அடித்த வண்ணம் பந்துசெல்லும்