பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

195

திசையில் முன்னாகவோ, பின்னாகவோ, சுழன்றோ சென்றாடினர்.68 பண்டைத் தமிழரிடையே கவின் கலைகள் மிக உயர்ந்த

நிலையில் வளர்ச்சிபெற்றிருந்தன.

பொதுக் கல்விமுறையில்

இசைத்துறை ஓர்

ன்றியமையாக் கூறாய் இருந்தது. உள்ளத்தில் மென்மையும் இணக்க நயமும் வாய்நத உணர்ச்சிகளை எழுப்பும் இனிமையான பண்களில் தமிழர் மேம்பட்டிருந்தனர். இசைப்பட்டியில் ஏழு கரங்கள் இருந்தன. அவை தாரம், உளை, குரல், இனி, துத்தம், விளரி, கைக்கிளை என்பன. முக்கியமான பண்கள் அல்லது சைக்குரல்கள் நான்கு. அவை பாலை, குறிஞ்சி, மருதம், செவ்வழி என்பன ஒவ்வொரு பண்ணிலும் பல கிளைத் திரிபுகள் இருந்தன. அவையனைத்தும் சேர்ந்து 103 தனிப்பண் கூறுகள்7' அந்நாளைய இசை நூல்களில் வகுத்துணரப்பட்டன.

70

இசையின் பகுதிகளாகிய தாழ்குரல், இடைக் குரல், உச்சக் குரல் ஆகியவை அறியப்பட்டிருந்தன. ஆனால் அவை ஒருங்கே பாடப்பெறவில்லை.72 ஒன்றன்பின் ஒன்றாகப் பாடப்பட்டன.

வளிக்கருவிகளில் (துளைக் கருவிகளில்) பல்வேறு வகைப் பட்டவை வழங்கப்பட்டன. ஆழ்ந்த முழக்கமுடைய சங்குகள் கோயில்களிலும், திருமண விழாக்களிலும், சாவிழாக்களிலும் பயன்படுத்தப்பட்டன. புல்லாங்குழலில் எட்டுத் துளைகள் இருந்தன. அது பல்வகை இசைநயங்களை வெளிப்படுத்தத் தக்கதாயிருந்தது.

ஒருமுக முரசமும், இருமுக முரசமும், பல்வேறுவகை ஊது கொம்புகளும், ஒவ்வொர் சையரங்கிலும், குழலுடன் ணைந்தன.

யாழில் நான்கு வகைகள் இருந்தன. மிகச் சிறிதும் பொதுவாக வழங்கப்பட்டதும் ஏழு நரம்புகளுடைதாயிருந்தது மற்ற யாழ் வகைகள் முறையே பதினான்கு, பதினேழு, இருபத்தொரு நரம்புகள் உடையனவாயிருந்தன74. வாசிக்கப்படும் போது, யாழ் இடது கையில் பற்றப்பட்டது. அதன் நான்கு விரல்கள் முறுக்காணிகளின் மீது படிந்தன. நரம்புகள் பெருவிரல்