ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்
(10)திருமகள் அசுரரை ஏமாற்றல்.
197
(11)இந்திரன், மனைவி அயிராணி பாணாசுரன் கோட்டை யின் வடக்கு வாயில்முன் தோன்றுவது.
தமிழ்க் கூத்துக்களில் பலவகைகள் இருந்தன. சில தெய்வங் களையோ, அரசரையோ, அவர்கள் வீரச் செயல்களையோ புகழ்ந்தன. சில மனிதரையோ, விலங்குகளையோ அவிநயித்தன. சில காதற் காட்சிகளைச் சித்தரித்தன. இவையன்றிக் குரவைக் கூத்தும் மக்கள் விரும்பிய ஆடல் வகையாய் இருந்தது. இதில் ஏழு, எட்டு அல்லது ஒன்பதுபேர் வளையமாக ஒருவருட னொருவர் கைகோத்து ஆடுவர். இவ்வாடலில் ஆடவரும் பெண்டிரும் கலந்துகொண்டனர். அதனுடன் காதல் அல்லது போர்பற்றிய பாடல்கள் இணைக்கப்பட்டன?7
இக்கூத்துக்களில் பலவும் ஆடலணங்குகள் அல்லது கூத்தியரால் நிகழ்த்தப்பட்டன.
ஆடலணங்கின் கலைப்பயிற்சி மிக இளமையில் ஐந்து வயதிலேயே தொடங்கப்பட்டு ஏழாண்டுகள் தொடர்ந்து நடைபெற்றது.
அவள் பயிற்சிப்பாடத் திட்டங்கள் இன்று கலைப்பயிற்சி நிறைவுடைய நங்கைக்குக்கூடப் பெருமைதரத்தக்கதாகும்.
ஆடவும், பாடவும், மென்னய நடையுடைய பழக்கங்கள் பயிலவும் அவள் கற்பிக்கப்பட்டாள். இதல்லாமலும் யாழும் குழலும் முழவும் கையாளவும், அயல்மொழிகளில் இயற்றப்பட் பாடல்களைப் பாடவும் அவர்கள் பழகினர். ஓவியம் வரைதல், நீர்விளையாட்டு, பகட்டான பல்வண்ணத் தூள்களால் மேனி ஒப்பனை செய்தல், அழகிய பூமாலைகள் தொடுத்தல், பூணணி மணிபுனைதல், பள்ளியறை சிங்காரித்தல், காலக்கணிப் புணர்தல், பருவத்திற்கேற்ற செயல் தகுதி யுணர்தல், பல்வேறு கலை இயல் துறைகளின் செய்திகள்பற்றி வாசித்தல், புதிர்கள் போடுதல், புதிர்கள் விடுத்தல், பிறர் கருத்துக்களை உய்த்துணர்ந்து கூறல் ஆகிய இத்தனையும், அவர்கள் முழு நிறைபயிற்சியின் கூறுகளாய் இருந்தன?8
சுருக்கமாகக் கூறுவதானால் ஆடவர்களுக்குப் பொழுது போக்கும் இன்பக்களிப்பும் தருவன என்றோ, அவர்கள்