(204
அப்பாத்துரையம் - 26
போதும் சரி, முதுகையாலோ, நோயாலோ இறக்க நேர்ந்தபோதும் சரி, அவர்கள் பார்ப்பனர் பரப்பிய திருவார்ந்த அறுகின்மீது கிடத்தப்பட்டு, வீர மாள்வுபெறும்படி வாளால் பிளக்கப்பட்டு இறப்பதையே விரும்பினர்.
88
அண்டையயலாருடன் ஓயாது நடைபெற்ற போர்கள் படைவீரருக்கு இடைவிடாப் பயிற்சி தந்து அவர்கள் வீர உணர்வை வளர்த்துப்பேணின. மன்னர் ஆயச்சுற்றத்தின் ஒரு பகுதியான பாணரும், புலவரும் அவர்களிடையே வீரப் புகழார்வத்தை உண்டுபண்ணவும் அதை வளர்க்கவும் மிகப் பெரிதும் உதவினர். அமைதிக் காலங்களில் அவர்கள் மன்னனுக்கும் அவன் வீரர்களுக்கும் அவர்கள் முன்னோர்களின் வீரச் செயல்கள் பற்றிய காதைகள் கூறி மகிழ்வித்தனர். போர்க்காலங்களில் அவர்கள் படையுடன் சென்று மூதாதையரின் வீரச் செயல்களைப் பின்பற்றம் படி தம் போர்ப் பாடல்களால் வீரர்களையும் தலைவர்களையும் ஊக்கினர்.
தமிழ்ப்பாடல்கள் கூறுகிறபடி புலவர்களில் நான்கு வகுப்பினர் இருந்தனர். அவர்களே பாணர், கூத்தர், பொருநர், விறலியர் என்பவர்கள்.
பாணர்கள் மிகத் தார்ந்த வகுப்பினர். அவர்கள் நகர்ப் புறங்களில் பொதுமகளிருடன் வாழ்ந்தனர். அவர்கள் நகருக்குநகர் சென்றபோதும் அவர்கள் மனைவியரும் பிள்ளை களும் அவர்களுடன் உணவுக்கலமும், சமயற்கலங்களும், தூக்கிக் கொண்டு புறப்பட்டனர். கூத்தர்கள் நடிகர்கள் ஆவர். அவர்கள் ஆடியவை முறையான நாடகங்கள் அல்ல. இசை நாடகமுறை சார்ந்தவை. அதை அவர்கள் பாடியே நடித்தனர்.
பொருநர் அல்லது போர்ப்பாடகர் மன்னன் அல்லது தலைவன் படையின் ஒரு பகுதியே யாவர். அவர்கள் ஒரு சிறு முரசு ஏந்திச் சென்றனர். அதில் ஒரு குறுங்கோல் கட்டப் பட்டிருந்தது. அதனுதவியால் அவர்கள் முரசறைந்தனர்.
சோழ அரசன் நலங்கிள்ளியைப்பாடும் புலவர் கோவூர் கிழார் கூறுவதாவது: “என் முரசில் கட்டப்பட்டிருக்கும் குணில் காண்டு நான் முரசையடிக்கும் ஒவ்வொரு தடவையும், உன்பகைவர் நடுங்குகின்றனர்” என்று அவர் குறிக்கிறார்.