பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

31.

32.

33.

213

வேறுபாடு அன்று, தொழில் வேறுபாடே, அதுவும் நாட்டின் நடுப்பகுதியாகிய மருதத்திணையை மட்டுமே அது குறித்தது. நாலு பிரிவுகளும் வேளாளர் வகுப்பின் பிரிவுகளேயாகும். ஏனெனில் வேளாளரே மருதநிலக்குடிகள்.

தொல்காப்பியர் ஒரு ஆரியப் பார்ப்பனர் என்ற கருத்தைத் தொடர்ந்து எழுந்ததே இந்தக் கருத்தும். திருநூல் அணிதல் முதலான குறியீடுகள் ஆரியப் பார்ப்பனருக்கே உரியன என்ற கருத்து இதனுடன் இணைகிறது. ஆனால் திருநூல் அணிதல் தமிழ்ப் பார்ப்பனர் அல்லது குருமாரிடமிருந்து குருமார் தொழிலை மேற்கொண்ட ஆரியர் கைக்கொண்ட வழக்கம் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் ஆரியர் இந்தியா வருமுன் நூலும் நூற்றலும் உடையவரல்லர். சிலர் ஆரியர் வரும்போது அதைத் தோலால் அணிந்திருந்தனர் என்றும், அது அவர்கள் வேட்டுவ நிலைக் காலத்தில் அம்புக் கூடுகள் தொங்கவிடுவதற்காக இட்ட வாரே என்றும், இன்றும் பூணூலில் மான்தோல் துண்டு இணைப்பது அம்மரபின் சின்னமே என்றுங் கூறுவர்.

இன்றும் பார்ப்பனர் மட்டுமின்றி, கம்மியர் முதலிய கலைத் தெழிலாளரும் திருநூலணிகின்றனர். சிலர் கருதுவதுபோல இது புது வழக்கென்று தோன்றவில்லை. நூலணிதல் நூலறிவின் குறியாதலின், தனித்துறை நூலறிவு இன்றியமையாது வேண்டப்பட்ட தொழில் துறையினர் யாவரும் தொழிற் குழுக்கள் அமைந்த காலையில் அதை மேற்கொண்டனர். தமிழ்ப் பார்ப்பனர் ஆகம நூலறிவுகாட்ட அணிந்த அதனையே தம் வேத அறிவுகாட்ட ஆரியப் பார்ப்பனர் மேற்கொண்டனராதல் வேண்டும் என்னலாம்.

மேலே பக்கம் 205 அடிக்குறிப்பு பார்க்க.

இது குறிப்பிடாததற்கான உண்மைக் காரணம் இதுவன்று மேலே பக்கம் 205. அடிக்குறிப்பு 1 பார்க்க

புறநானூறு, பாட்டு. 189.

34.

35. புறநானூறு, பாட்டு 150

36.

புறநானூறு, பாட்டு 274.

37.

38.

தொல்காப்பியம், III பக். 470 தாமோதரம் பிள்ளை பதிப்பு.

பெரும்பாணாற்றுப்படை அடி 69, சிலப் XVI, அடி 107.

39.

கலித்தொகை பாட்டு 111, 115.

40.

கலித்தொகை, பாட்டு 18, அடி 3.

41. சிலப்பதிகாரம் VI, அடி 88.

42. குறிஞ்சிப்பாட்டு, அடி 102.

43.

44.

பொருநராற்றுப்படை, அடி. 39.

கலித்தொகை பாட்டு 33, 35.