பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

221

நின்று ஏற்றுக்கொண்டனரே! என்ன அருமைப்பாடு? என்று வியந்தார் கல்லாடர்.

மற்றொரு புலவர் எழுந்து கிளர்ச்சியுடன் கூறினார்! “நெடு மாறனே! எதிரிகளை வீழ்த்தும் வெற்றிவாள் உன்னுடையதே அத்துடன் இன்று நீ கேட்ட சொல்லை வேறு எவரும் என்றும் கேட்டிருக்கமாட்டார்கள். அது கேட்டு நாம் அறம் இன்னதென்ற றிந்தோம். பொருள் இது எனப் புரிந்தோம். இன்பவழியும் தெரிந் தோம். உலவா வீட்டின்பமும் இனி எமக்கு எளிது! என்றார்.”

“ஏட்டில் எழுதினால் மதிப்புக் கெட்டுவிடும் என்று எண்ணி ஆரியர் தம் வேதத்தை எழுதி வைக்காமல் நெட்டுருப்பண்ணிப் பேணுகின்றனர். ஆனால் வள்ளுவர் முப்பாலை ஏட்டில் எழுதி எல்லாரும் வாசித்தாலும் அதன் மதிப்புக் குறைவதில்லை” என்று பாராட்டினார் மற்றொருவர்.

"ஞாயிறு, திங்கள், வெள்ளி, வியாழன் ஆகிய நான்குமே மண்ணகத்தின் பரப்பில் நின்று இருளை ஓட்டுகின்றன. ஆனால் கற்றறிந்த வள்ளுவரின் குறள் ஒன்றே மக்கள் உள்ளங்களுக்கு ஒளி கொடுக்கின்றது” என்று அழகான வானநூல் உவமை தந்தார், ஒரு வானநூற் புலவர்.

"கொம்புகளால் கல்லரண்களைப் பிளக்கும் யானை போன்ற விறலுடைய அரசனே! சீந்திக்கண்டமும், சுக்குத்துண்டும் தேனும், கலந்து முகர்ந்தால் எவருக்கும் தலையிடிகுணமாய்விடும். ஆனால் நம் (சீத்தலைச்) சாத்தனாருக்கு முப்பால் கேட்ட பின்தான் தலையிடி தீர்ந்தது! என முப்பால் பாராட்டுடன் தம் மும்மை மருந்து விளம்பரத்தையும் இணைத்தார் ஒரு மருத்துவப் புலவர்! இப்புலவர் நயமிக்க நகைச்சுவையும் உடைய வராயிருந்திருக்க வேண்டும்! ஏனென்றால் தம் புலமைத் தோழரான சாத்தனாருக்கு அவர் இப்பாட்டில் ஒரு பாராட்டையும் ஒரு நையாண்டியையும் ஒருங்கே அளித்துள்ளார்."

ல்

ஒவ்வொரு பாட்டுப் பிழைக்கும், இலக்கணப் பிழைக்கும், சாத்தனார் எழுத்தாணியால் ஒருதடவை தம் தலையில் குத்திக் கொள்வாராம். புலவர் கழகத்தில் திருக்குறளின் 1330 பாக்களும் வாசிக்கப்பட்டபோது, ஒரு தடவையாவது இப்படிக் குத்திக் கொள்ள அவருக்கு வாய்ப்பு நேரவில்லையாம்!