பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

2.

223

தாமரைக்கண்ணான், தவ்வை, திருமகள் ஆகிய குறிப்புகளும் கீழ்த்திசையிலுள்ள பெரும்பாலான சமயங்களுக்கு, அவற்றை அளாவி நீரிடை நெய்போல் இலங்கும் ஆரிய சுமார்த்த சமயத்துக்குக் கூடப் பொதுவானதே." மலர்மிசை ஏகினான்” முதலிய குறிப்புக்கள் பொதுவுரிமையுடன் புத்தசமயத்திற்கே சிறப்புரிமையாகக் கொள்ளத்தக்கன.

தவிர, வள்ளுவர் "கொல்லாமை"க் கருத்தை நாலடியார் முதலிய சமண நூல்களுடனும், புத்த முதலிய பிற சமய நூல்களுடனும் ஒப்பிட்டுக் கண்டால் ஒரு புதிய உண்மை விளங்கும். கல்வியை வலியுறுத்தும்போது கல்லாதவன் விலங்கு என்று கூறி, அதை மனித இனத்தின் இன்றியமையா அடிப்படைப் பொது பண்பாகக் காட்டியவர் திருவள்ளுவர். கொல்லாமையை வலியுறுத்தும் போது அதைப் படிப்படியாக உலகை உண்ணின்று திருத்தும் ஒரு குறிக்கோளாக்கி, அதனைச் செயல்முறைக் கோட்பாடாகக் கொண்டவரைத் "தெய்வமனிதர், அந்தணர், எனக் காட்டினார். கொள்ள முடியாதவரும் பின்பற்றுக, பின்பற்ற முடியாதவரும் பேணுக. பாராட்டுக, வழுத்துக, என்றார். புத்த, சமண, சைன, வைணவக் கருத்துக்கள் உருவாகுமுன் அச்சமயப்பெயர்கள் வேறு வேறாகத் தமிழர் நெறியினின்று பிரியுமுன் ஆரியம் இடைநின்று தமிழரின் ஒரே நெறியைப் பலவாகப் பிரிக்குமுன் அவ்வெல்லா நெறிகளுக்கும் வழிகாட்டிய மிக முற்பட்டக் கால தமிழ் அறிவர் மரபுசார்ந்த அறிஞருள் ஒருவரே திருவள்ளுவர் என்பது உய்த்துக் காணத்தக்க உண்மை ஆகும்.

மூல ஆசிரியரின் இக்கருத்து முழுதும் உண்மையல்ல என்பதை அவர் அடுத்துக் கூறும் வாசகங்களே காட்டுகின்றன. திருவள்ளுவருக்குரிய சமயம் எதுவாயினும் அவர்க்குரிய சிறப்பு அவர் மேற்கொண்ட சமயமன்று. அவர் திறந்த சிந்தையே யாகும். கொல்லாநெறி நிகண்ட வாதிகளுக்கே தனிச்சிறப்புடைய கோட்பாடாயினும், இன்றைய புத்தம், சமணம், வைணவம் போன்ற கீழை உலக நெறிகள் எல்லாவற்றுக்கும் சிறப்பற்றதன்று. ஏனைய சமயங்களுக்குக்கூட முற்றிலும் முரண்பட்ட தன்று. உலக நெறிகள், உலக இலக்கியங்களை ஆய்ந்துணர்ந்த பெரியார் பலரும். ஆல்ஃவிரட் ஷ்வைட்ஸர் உட்பட, அவரைச் சமயம்சார்ந்த அறிஞர் என்பதைவிட சமயம் கடந்த அறிஞர் என்றே கொள்கின்றனர் என்பதும் கூர்ந்து நோக்கத்தக்கது.

தவிர, திருவள்ளுவர் காலம் சங்ககாலத்திறுதிக்கு முற்பட்டது என்பதைத்தவிர, வேறெவ்வகையிலும் உறுதிபெறவில்லை. இந்நிலையில் புத்த சமண நெறிகள் தாமும் அவர் காலத்தில் இயங்கின என்று அறுதியிட்டுரைத்தல் கூடாதது. அந்நெறிகளின் கோட்பாடுகள் உளவாகலாம். ஆனால் அந்நெறிகளுக்கு முற்பட்டே அக் கோட்பாடுகளைக் காண்பது அரிதன்று. ஏனெனில் அவ்விருபெருஞ் சமயங்களும் சைவ வைணவ சமயங்களைப் போன்றே தொன்று தொட்டு வளர்ந்துவந்த கருத்துக்களின் மலர்ச்சிகள்ஆகும். தெளிவாக உருவானபின்னரே புத்தம், சமணம், சைவம், வைணவம் என்ற பெயர்களுக்குக் கொள்கைகள் இலக்காவன. அத்தகைய நிலையில் உருவான எச்சமயத்தின்