(228
அப்பாத்துரையம் - 26
மாதவியின் இல்லத்தில் ஒருங்கு கூடினர். கோவலன் விருப்பப்படி அவர்கள் அருவினைகள் பல ஆற்றிக் குழந்தையை வாழ்த்தி, அதற்கு மணிமேகலை என்று பெயரிட்டனர். ஏனெனில், கோவலனுடைய முன்னோர்கள் குலதெய்வம், கடல்தெய்வ மாகிய மணிமேகலையே ஆவள். கோவலன் அவ் விழாவில் கலந்துகொண்ட அந்தணர்க்குக் கைநிறைய பொன் அளித்தான்.4
ழந்தையின் பிறப்பு மாதவி கோவலன் தொடர்பை மேலும் நெருக்கமாக்குவதாகவே தோற்றிற்று. அவன் கலை நங்கயிடம் முன்னிலும் மிகுதி பற்றுடையவனானான். ஆனால் தங்குதடையற்ற இன்பத்தில் கழித்த இந்தச் சில ஆண்டுகள் அவன் செல்வவளத்தை இறைத்தன. முன்னோர் செல்வம் முற்றிலும் தீர்ந்த பின்னும், அவன் மனைவியின் அணிமணிகளை ஒவ்வொன்றாக விற்றுச் செல்வழிக்கவே முனைந்தான். அவன் மனைவியோ, தன் அன்புக்குப் போட்டியாக எவரும் வந்து தன்னிடமிருந்து அவனைப் பிரிக்காமுன்னம் அவனிடம் எவ்வளவு பாசம் கொண்டிருந்தாளோ, அதே அளவு பாசத்தை இப்போதும் கொண்டிருந்தாள். ஆகவே அவள் எத்தகைய தடையும் கூறவில்லை. கணவனை மகிழ்விக்கும் ஒரே நோக்கம் கொண்டு, விருப்புடன் தன் நகைகளை அவனிடம் தந்தாள்.
இந்திரன் பெயரால் ஆண்டுதோறும் நடைபெறும் விழா அந்த ஆண்டு புகார் நகரில் பேராரவாரத்துடன் நடந்தேறிற்று. ருபத்தெட்டு நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற அவ்விழாவில் அந்த இன்ப மாநகர் தன் எழில் முழுவதும் காட்டி இன்மகிழ் வூட்டிற்று. முதல்நாள் அரசனே நேரில் வந்திருந்து விழாவைத் தொடங்கி வைத்தான். அரண்மனையிலிருந்து அவன் ஊர்வலமாகப் புறப்பட்டுச் சென்றான். அவன் ஆட்சி முதல்வர்களும், ஐம்பெருங் குழுவினரும், எண்பேராயத்தாரும், நகரப் பெருமக்களும், செல்வரும் தேரூர்ந்தும் யானை குதிரையிவர்ந்தும் சென்று காவிரிக்கரையை அணுகினர்.மன்னர் முன்னிலையில், மன்னிளங்கோக்களால் தங்கக் குடங்களில் ஆற்றுநீர் நிரப்பப்பட்டது. அதன்பின் ஊர்வலம் இந்திர விகாரம் சென்றது. மக்கள் வாழ்த்தொலி எழுப்ப, இசைக்கழுவினர் இசையார்ப்பொலி கூட்ட, வானவர் வேந்தன் திருவுருவம் சிறந்த நன்னீரினால் திருமுழுக்காட்டப்பட்டது. விழாமுடிவில் இளங்