(230) ||
அப்பாத்துரையம் - 26
பிளப்பதில் அவள் கண்கள் கூரிய அம்புகள் போன்றிருந்தன. அவள் அழகில் கண்களை ஈடுபடவிட்ட ஆடவர் உளமுறிவுற்று மாண்டதால், அவ்வழகிய ஒரு கொலை நங்கையாய் விளங்கினாள்.
கோவலன் அருந்திறல்மிக்க பாடலின் அழகு நயங்களை மாதவி ஆர்வமீ தூரக்கேட்டு உளமகிழ்வுற்றாள். ஆயினும் அப் பாடல்கள் தன்னையே குறித்தன என்று அவள் எண்ணாமலிருக்க முடியவில்லை. தன் காதலன் தன்னிடம் உவர்ப்புத் தட்டிய தனாலேயே இவ்வாறு பாடியதாக அவள் எண்ணினான்.
காதலன் கையிலுள்ள யாழை அவள் மெல்ல வாங்கினாள். அவளும் வெறியூட்டும் இனிய குரலில் பாடத் தொடங்கினாள். அதன் இனிய அலைகளையுச் செவிகொடுத்துக் கேட்டவர் அனைவரின் உள்ளங்களையும் அது கனிவித்து உருக்கிற்று. அவளும் காவிரியையும் புகார் நகரத்தையும் பொருளாக வைத்தே பாடினாள். அதன் பின் அதே செம்படவ நங்கையின் குரலை எழுப்பி, தன்னுடன் இல்லாது பிரிந்து இருக்கும் காதலனை நினைந்து அவன் பாடுவதாகத் தன் ஏக்க முழுதும் தெரிவித்தாள்? “புன்கண் கூர் மாலைப் புலம்பும் என்கண்ணேபோல் துன்பம் உழவாய், தயிலப் பெறுதியால்! இன்கள் வாய்நெய்தால்! நீ எய்தும் கனிவினுள் வன்கணார் கானல் வரக்கண் டறிதியோ?
பறவைபாட் டடங்கினவே! பகல்செய்வான் மறைந்தனனே!
நிறைநிலா நோய்கூர நெடுங்கணீர் உகுத்தனவே!
துறுமலர் அவிழ்குழலாய்! துறந்தார்நாட்டு உளதாங்கொல், மறவையாய் என்உயிர் மேல்வந்த இம்மருள் மாலை?”
இப்பாடலின் உருக்கமான உணர்ச்சி கோவலன் கவனத்தை முற்றிலும் அவள்பால் ஈர்த்தது.அவள் குரலதிர்வினால் ஏற்பட்ட இசையலைகள் அவனுக்கு வெறியூட்டின: ஆனால், அதன் உள்ளார்ந்த மெய்ப்பாடு அவனைத் திடுக்கிட வைத்தது. மாதவி தன் உள்ளத்தை வேறு ஒருவிரிடத்தில் செலுத்தி யிருந்தனளோ என்ற ஐயம் அவனிடம் எழுந்தது. பொறாமை அவன் உள்ளத்தைக் கிளறிற்று. நேரமாயிற்று என்ற உணர்ச்சியற்ற சாக்குப்போக்குக்