ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்
66
235
துறவுநங்கை கண்ணகி பக்கம் திரும்பி நோக்கினாள். 'நீங்கள் போகவேண்டிய தொலையோ மிகப்பெரியது. காட்டு வழி கரடுமுரடான முட்பாதைகள் நிறைந்தது. இதில் இம்மெல்லிய லாளுடன் செல்வது எளிதான காரியமல்ல. ஆகவே இக்கடுமுயற்சியைக் கைவிட்டுவிடும்படி நான் உங்களை வேண்டுகிறேன். ஆயினும் நீங்கள் மதுரைக்குச் செல்வதிலேயே முனைந்திருக்கிறீர்கள் என்று காண்கிறேன். எப்படியும் சிலகாலமாக நானும் மதுரைக்குச் செல்லவேண்டுமென்னும் ஆவலுடையவளா யிருக்கிறேன். அந்நகரின் அறிவார்ந்த நூலறி புலவர்களிடம் அருகனின் அருமெய்மைகளைக் கேட்டுணர வேண்டுமென்ற ஆர்வம் எனக்கு மிகுதி. எனவே இத்தறுவாயில் நான் உங்களுடன் வரலாம் என்று கருதுகிறேன். ஒன்றாகவே நாம் புறப்படலாம்." என்றாள்.
கோவலன் அறநங்கையை நன்றியுணர்வுடன் வணங்கினான். “அருள்சான்ற அன்னையே! எம்முடன் செல்லத்திருவுளங்கொள்வ தானால், என் மனைவியின் பாதுகாப்புப்பற்றிய என் கவலைகள் யாவும் அகன்றன. தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி உரியது,” என்றான்.
அறநங்கை மதுரைக்குச் செல்லும் பாதைகளின் கடுமை களையும், இடர்களையும் விளக்கினாள். சிறப்பாக வழியில் உள்ள ஊர்கள் எவ்வளவு சின்னஞ்சிறியவையானாலும் அவற்றுக்குத் தீங்கு நேராதிருக்கும் வகையில் எச்சரிகையாய் இருக்கும்படி அவள் அறிவுறுத்தினாள். இத்தீங்குகள் நிகண்ட அறவோர் களால் படுபழி களாகக் கருதப்பட்டிருந்தன.
பயணம் இடரற்றதா யிருக்கவேண்டுமென்று அருகனை வேண்டியவண்ணம் அவள் தன் திருக்கலத்தைக் தோளிலிட்டு, கையில் மயில்பீலியுடன் புறப்பட்டாள்.
சிறுசிறு தொலையாக நடந்து அவர்கள் வளமான நாட்டுப் பகுதி வழியாகச் சென்றார்கள். கதிர்கள் அலையாடும் பசுங் கழனிகள், நீண்டுயர்ந்த கருப்பங்கொல்லைகள், பசுஞ் சோலை வனங்களின் நிழலகஞ்சார்ந்து நிலவிய சிற்றூர்கள் ஆகியவை அவர்களுக்கு இருபுறமும் நிறைந்து கிடந்தன. காவிரியிலிருந்து பிரிந்துசென்ற கிளைக் கால்வாய்களில் மதகுகளின் வழியாகவும் சீப்புக்களின் வழியாகவும் பீறிட்டுச்செல்லும் நீரின் சலசலப்