(238
அப்பாத்துரையம் - 26
"கொடும்பையிலிருந்து இடதுபுறமாகச் செல்லும் பாதையில் முன்னேறுபவர் வயல்களும் காடுகளும் வற்றற் பாலைகளும் கடந்துசென்று ஒருமலையை அடைவர். அதன் உச்சியில் திருமால் கோயில் உளது. அடிவாரத்திலே சிலம்பாறு ஓடுகிறது. அம்மலை யருகேயுள்ள பள்ளத்தாக்கின் காவல் தெய்வம் அவ்வழி செல்வோருக்கு இடையூறு உண்டுபண்ணக் கூடும். காத்தருள் புரியும்படி திருமாலை வணங்கியவண்ணம் பள்ளத்தாக்கைக் கடந்தால் மதுரை சென்று சேரலாம்."
"மேலே சொன்ன இந்த இரண்டு பாதைகளுக்கும் நடுவேயுள்ள வழி மற்ற இரண்டையும்விட நல்லவாய்ப்புடையது; இன்பகரமானது. ஏனெனில் இது சோலைகள், சிற்றூர்கள் நிறைந்த பகுதிகளினூடாகச் செல்கிறது. இப்பாதையை நீங்கள் பின்பற்றுவதே நல்லது.”
வாய்ப்பான வழியறிந்துகொண்டபின் கண்ணகியும் கோவலனும் கவுந்தியடிகளும் மீண்டும் மதுரைக்குப் பயணம் தொடர்ந்தார்கள் இடையே கண்ணகி கால்நோவாலும் களைப்பாலும் வருந்தியதனால் அவர்கள் வேடர்கள்" வாழ்ந்த ஒரு சிற்றூரருகே ஒரு காளிகோயிலில் ஒருநாள் தங்கவேண்டிய தாயிற்று. இங்கே காளிக்குப் பூசனையாற்றும் வெறியாட்டு நங்கை காளியின் அச்சந்தரும் உருவம் பூண்டு ஆடிய மெய்சிலிர்க்க வைக்கும் ஆட்டத்தைக் கண்ணூற்றார்கள். பேய்பிடித்தவர் போல அவள் ஊர்வெளியில் நின்று துடிதுடிப்புடன் ஆடியவண்ணம், மறவர்கோயிலில் சில நாளாகப் பலி கொடாததனால் காளி கடுஞ்சினங் கொண்டுள்ளாளென்றும், அவர்கள் உடனே கிளர்ந்தெழுந்து அருகிலுள்ள ஊர்க் கால்நடைகளைத் தாக்கிக் கொள்ளையிட்டுப் பலி கொடுக்க வேண்டுமென்றும் ஆரவாரித்தாள்!”
பாண்டியர் ஆண்ட பகுதிகளில் திருடர் அச்சமோ கொடு விலங்குகளின் அச்சமோ அரசபாதைகளில் கிடையாது என்று அவர்கள் கேள்வியுற்றனர். ஆகவே பகலில் கண்ணகி வெயிலைத் தாங்கவோ, நிலத்தின் பழுத்த வெப்பில் கால் பாவவோ முடியாதா கையால், இரவிலேயே பயணம் செய்தல் நன்று என்று கோவலன் கருத்துரைத்தான். கவுந்தியடிகள் இக்கருத்தை வரவேற்கவே, அவர்கள் வேடர் ஊரிலிருந்து ஏற்பாட்டின்போது