||--
(242) ||__
அப்பாத்துரையம் - 26
உனக்குத் தெரியாதா? மற்றொரு மன்னவன் சூதாடி நாடிழந்து, மனைவியுடன் காடுசென்று அங்கே அவளைக் கைவிட்டான். இந்த அரசர்களைப் பார்க்க உன் நிலை எவ்வளவோ போற்றத்தக்கது. ஆகவே ஊக்கத்தைக் கைவிடாது நகருக்குள் சென்று, தக்க தங்கலிடம் தேடி மீள்க!' என்றார்.
கவுந்தியடிகளிடம் விடைபெற்றுக்கொண்டு, கோவலன் வாயில்கடந்து நகருக்குள் சென்றான். வாயில்களில் யவன வீரர் உருவிய வாளுடன் நின்று காவல் செய்துகொண்டிருந்தனர். மாண்புமிக்க மாநகரத்தின் அகல் வீதிகளையும் செல்வ வளமிக்கவர் வாழ்ந்த மாடமாளிகைகளையும் அவன் வியப்புடன் நோக்கினான். நண்பகல்வரை அவன் சந்தைத் தெருவழியாகவும் வணிகர் வீதி வழியாகவும், பொதுச் சதுக்கங்களினூடாகவும் நடந்து திரிந்தான். அதன்பின் உச்சி வெயில் தாங்கமாட்டாமல் தெருவில் வரிசையாக நிறுவப்பட்டிருந்த கொடிகளின் நிழலில் ஒதுங்கியவண்ணம் திரும்பினான்.
20
கோவலன் கவுந்தியடிகளிடம் மதுரையின் வீறமைதி பற்றியும் அதன்மக்களின் இன்ப நிறைவுபற்றியும், பாண்டியன் பேராற்றல் பற்றியும் வருணித்துக்கொண்டிருந்தான். அச்சமயம் புகார்நகர் அருகிலுள்ள தலைச்செங்கானம் என்ற ஊரிலுள்ள பார்ப்பன யாத்திரிகனான மாடலன் என்பவன் அவர்கள் தங்கியிருந்த சோலைக்கு வந்தான். கோவலன் முன்பே அவனுடன் அறிமுகமானவனாயிருந்ததனால், வணங்கி
வரவேற்றான்.
அவனை
கோவலன் தன் மனைவியுடன் கால்நடையாகவே மதுரைக்கு வந்து சேர்ந்திருந்தான் என்று கேட்டு மாடலன் வியப்பார்வம் உற்றான். புகாரில் இருக்கும்போது கோவலனால் நிகழ்த்தப்பட்ட அன்பறச்செயல்களைப் புகழ்ந்து எடுத்துரைத்த துடன், துன்புற்றவர் கட்கும் ஏழைகட்கும் இவ்வளவு தண்ணளி காட்டிய அவ்வண்ணல் இவ்வாறு துன்பமுழக்க நேர்ந்த தெவ்வாறு என்று வியந்தான்.
பொழுதடையுமுன் கோவலன் மீண்டும் நகருக்குள் சென்று வணிகர்மனைகள் இருந்தபகுதியில் தங்கிடம் அமர்த்திக்கொள்ள வேண்டுமென்று மாடலனும் கவுந்தியடிகளும் வற்புறுத்தினர்.