பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

247

தகுதியுடையவரல்லர். ஆகவே அரசனுக்குத் தகவல் கூறி அவர் விருப்பத்தை உனக்குத் தெரிவிக்கிறேன். அதுகாறும் என் சிறு குடிலிலேயே தங்கியிருக்கக் கோருகிறேன்," என்றான்.கோவலன் அதன்படியே பொற்கொல்லன் வீட்டின் அருகாமையிலிருந்த ஒரு கோவிலக்தே வீற்றிருந்தான்.

பொற்கொல்லன் உள்ளம் தனக்குள்ளாகப் பேசிக் கொண்டாது: “இந்த அணிகலன் நான் திருடியுள்ள அரசியின் அணிகலன்போன்றே இருக்கிறது. இக்களவு வகையில் அரசன் என்மீது ஐயுற ஏதேனும் வாய்ப்பு ஏற்படுமுன், இந்த அயலானே அதைத் திருடினானென்று நான் குற்றம் சாட்டிவிடுதல் நலமாகலாம்." இவ்வாறு எண்ணியவனாய் அவன் நேரே அரண்மனைக்குச் சென்றான்.

அவன் அரசனை அணுகிய சமயம், அரசன் அரசியின் உவளகம் நுழையத் தொடங்கியிருந்தான். பொற்கொல்லன் அச்சமயம் பார்த்து அரசன் காலடியில் வீழ்ந்து செய்தி கூறினான். “கடப்பாரையோ கன்னக்கோலோ இன்றித் தன் மாயத்தாலேயே அரண்மனைக் காவலர்களைத் துயிலுறுவித்து அரசியின் சிலம்பைத் திருடிச்சென்ற கள்வன் இதுகாறும் நகர் காவலரின் தேடுமுயற்சி களுக்கு அகப்படாமல் தப்பியிருக்கிறான். ஆனால் இப்போது அவன் என் சிறு குடிசையில் வந்து தங்கியிருக்கிறான்,” என்றான்.

மன்னன் காவலரில் சிலரை அழைத்தான்."சிலம்பு திருடன் கையிலிருக்கிறதா என்று பார்த்து, இருக்குமானால், திருடனைக் கொன்று அணிகலனைக் கொணர்க,” என்று பணித்தான்.

தன் சூழ்ச்சி முறை நன்கு பலித்து வருவது கண்ட பொற் கொல்லன் மகிழ்வுடன் காவலர்களைக் கோவலனிடம் அழைத்துச் சென்றான். “மன்னராணையால் இவ்வீரர்கள் அந்தச் சிலம்பைக் காண வந்திருக்கிறார்கள்," என்றான். கோவலன் அணிகலனைக் காட்டினான். அவர்கள் அணிகலனையும் கோவலனையும் மாறி மாறிப் பார்த்தார்கள். பொற்கொல்லனைத் தனியே அழைத்துச் சென்று, "இவன் உயர்குடியினனாகக் காணப் படுகிறான்; இவன் திருடனாயிருக்கமுடியாது,” என்றனர்.

“திருடர்களெல்லாம் மாயமும், மருந்தும், மந்திரமும் வல்லவர்கள். மன்னன் பணியை நிறைவேற்றுவதில் நீங்கள் காலந்