பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

251

காலடிகளைத் தழுவ முயன்றபோது, 'நீ இங்கேயே இரு என்றுகூறி அவன் ஆவி வானுலகத்துக்குத் தாவிற்று என்று அவள் கண்டாள். அவன் வாழ்நாளில் அவன் வாழ்க்கைத் துணைவியாக இருக்க அவள் அவாக்கொண்டிருந்தாள். அவன் இன்ப துன்பங்களில் பங்கு கொண்டு, துன்பத்தில் ஆறுதலளித்து உறுதுணையாக வாழ எண்ணி யிருந்தாள். ஆனால், இந்த அவாக்களெல்லாம் இப்போது மண்ணுடன் மண்ணாக மடிந்தன.

தன் கனவை இப்போது அவள் எண்ணிப்பார்த்தாள். எதிர் பாராதபடி இவ்வளவு விரைவில் அது நிறைவேறிவிட்டதே என்று ஏங்கினாள்.

அவளுக்கு இப்போது வாழ்வு கசந்துவிட்டது. அழன்றெரி கின்ற ஒரே ஓர் அவா இப்போது அவளை ஆட்கொண்டது. அதுவே, கணவன் குற்றமின்மையைத் தெளிவு படுத்தி, அவன் கொலைக்குக் காரணமான கொடுங்கோல் மன்னனைப் பழிக்கிரை யாக்கி விடவேண்டுமென்பது24

அதே இரவில், பாண்டிய அரசி அச்சந்தரும் கனவுகள், தீக்குறிகள் கண்டாள். ஆகவே அவள் காலையில் குறளர்கள், பேடியர்கள், கூளர்கள், தோழியர்கள் புடைசூழ, மன்னனிடம் விரைந்து சென்றாள். அதற்குள்ளாகவே அரசன் எழுந்திருந்து அரியணையில் வீற்றிருக்கக் கண்டாள். அவனிடம் அவள் தன் கனவை எடுத்துரைத்தாள். அதை அவள் கூறிக்கொண்டிருக்கும் போதே, கண்ணகி அரண்மனைவாயிலுக்கு வந்துவிட்டாள்.

"வாயிலோனே! என்று அவள் வாயில்காப்போனை அதட்டி விளித்தாள்.”

“குடிகளிடம் தன் கடமையுணராத அறிவற்ற மட்டியரசனுக்கு ஆட்பட்டு வேலைசெய்யும் வாயிலோனே!"

“சிலம்பு கைக்கொண்டு, கணவனை இழந்த காரிகை ஒருத்தி வந்திருக்கிறாளென்று உன் அரசனிடம் போய்ச்சொல்!” என்று அவள் உறுமினாள்.

வாயில்காப்பவர்களில் ஒருவன் அரசன் முன்னிலையில் சென்று வழக்கமான வணக்கவுரை கூறி, செய்தி யுரைத்தான். "நீடுவாழ்க, கொற்கை வேந்தனே!'

>