பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

261

துறவு மடத்திற்குச் சென்றபோது அங்கே மாதவி கூடத்தில் அமர்ந்து, தன் மகள் மணிமேகலையுடன் பூத்தொடுத்துக் கொண்டிருந்தாள். முன்பு இன்னலங்கெழுமும் நடிகையாயிருந்த அவளது இப்போதைய மாறிய தோற்றங்கண்டு அவள் இரங்கினாள். கலைத்திறம் நிறையப் பெற்ற ஓர் ஆடல் நங்கை புத்த துறவியாவது எவ்வளவு பொருந்தாச் செயல் என்று மக்கள் கூறுவதை அவள் மாதவிக்கு எடுத்துரைத்தாள்.

மாதவி துயரார்ந்த முகத்துடன் மறுமொழி பகர்ந்தாள்:

'ஆ, தோழி! என் காதலன் முடிவுகேட்ட அக்கணமே என் உயிர் உடலைவிட்டுப் போய்விடாதிருந்தமைக்கு மிக வருந்து கிறேன். இந்நாட்டின் மங்கல மாதர் கணவன் இறந்தவுடனே துயராற்றமாட்டாமல் உயிரை விட்டுவிடுவார்கள். அன்றேல் கணவன் சிதையுடன் தம் உடலையும் தாமே விரும்பி அழல் சிதைக்க விட்டுவிடுவார்கள். இரண்டுமின்றேல் வரும்

பிறப்புக்களில் தம் கணவருடன் சேரும்பொருட்டு வழிபாடுகள். நோன்புகள் ஆற்றுவர். ஆனால், என் காதலனின் திருநிலையுற்ற துணைவி தன் கணவனின் நேர்மைகெட்ட கொலை கேட்டுச் சினங்கொண் டெழுந்து, அக்கொடுஞ்சினத் தீக்கு மதுரையை இரையாக்கினாள்.”

66

'அத்தெய்வக் கற்புடைய மாதராருக்குப் புதல்வி முறையாகிய என் மகள் மணிமேகலை ஒருநாளும் பயனற்ற அவல வாழ்க்கை வாழாள்; தன் வாழ்நாள் முழுவதையுமே அறத்தின் பணிக்கு ஒப்படைப்பாள்.”

"இன்னும் நான் கூறுவதைக்கோள், தோழி!”

"நான் இந்நகரிலுள்ள புத்தமடத்திற்குச் சென்று மாண்புமிக்க மடத்தின் தலைவர் திருவடிமீது வணங்கி என் காதலனின் துயரக் கதையை அவரிடம் கூறினேன். அவர் துன்புற்ற என் மனத்துக்கு ஆறதலளிக்கும்படி எனக்கு மேலான உண்மைகளைத் தெரிவித்தார்."

"பிறந்தார் பெறுவது பெருகிய துன்பம்

பிறவார் உறுவது பெரும் பேரின்பம்;

பற்றின்வருவது முன்னது, பின்னது அற்றோர் உறுவது”