பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

265

சோழ அரசன் கிள்ளிவளவன் மகனாகிய உதயகுமாரன் இவ்விடையூற்றைப்பற்றிக் கேள்வியுற்று, வேகமிக்க போர்க்குதிரை ஒன்றில் விரைந்தேறி, யானையைத் துரத்திப் பிடித்து அதன் வெளி கொண்ட போக்கை அடக்கி, அதை அதன் பாகர்கள் வசம் ஒப்படைத்தான். அதன்பின் அவன் ஒரு தேரிலேறி ஆடல் நங்கையர் வீதி வழியாகத் தன் அரண்மனைக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தான். அச்சமயம் அவன் தோற்றத்தில் ஒரு தேவன்

போல் விளங்கினான்.

வழியில் ஓர் ஆடல்நங்கையின் வீட்டில் தெருமுகமாய் அமைந்திருந்த பலகணியருகில் வீட்டினுள் உயர்குடி சார்ந்த வணிகனொருவன் உள்ளத்தில் கடுந்துயரமுற்றிருப்பவன் போன்ற தோற்றத்துடன் ஆடாது அசையாது வெறித்திருக்கக் கண்டான். இளவரசன் பொன்முலாமிட்ட அம்மாளிகையின் வாயிலருகே தன் தேரை நிறுத்திக்கொண், இறங்கி வந்து அவனிடம் பேச்சுக் கொடுத்தான். “உம் துயரம் யாது? நீரும் ஆடல் நங்கையரும் இவ்வளவு மனம் சோர்வடைந்திருப்பானேன்!" என்று கேட்டான்.

வணிகன் ஆடல் நங்கையுடன் இளவரசனை அணுகி வந்து, தலைதாழ்த்தி வணக்கம் செய்து 'நீடுவாழ்க' என அவனை வாழ்த்திய பின் மறுமொழி பகர்ந்தான். "இப்போதுதான் நான் மாதவியின் அழகிய புதல்வி மணிமேகலை மலர் வனத்துக்குச் செல்வதைக் காணநேர்ந்தது. பேழையில் அடைத்து வைக்கப் பெற்ற மலர்போலத் துறவியர் மடத்தின் காற்றுப்புகா அடைப்பி லுள்ள அவள் அழகு வாடி வதங்கியது போலத் தோற்றிற்று. அவள் தோற்றமும் அவள் தந்தையின் துன்பமிக்க முடிவும் சேர்ந்து என் உள்ளக் கிளர்ச்சியைக் கெடுத்ததனால், யாழில் ஈடுபட முடியாமல் நான் துயரடைந் துள்ளேன்,” என்றான்.

66

அவ்வெழில் நங்கையை என்னுடன் தேரில் ஏற்றிக் கொண்டு இங்கே வருகிறேன்,” என்று இளவரசன் மகிழ்வுடன் கூறிய வண்ணம் மீண்டும் தேரிலேறி மலர்வனம் நோக்கிச் சென்றான்.

மலர்வனத்தின் வாயிலில் தேரையும் உழையரையும் நிறுத்தி விட்டு, அவன் கீழே குதித்து மலர் வனத்துக்குள் தனியாகச் சென்றான். அவன் கண்கள் மலர் வனத்தின் நிழலார்ந்த