பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

281

இரத்தலை மேற்கொண்ட ஆண்டி என்ற முறையில், முதலல் ஒரு வாழ்வரசியிடமிருந்தே ஐயமேற்பது தகுதி என்று மணிமேகலை கருதினாள். ஒரு வணிகன் மனைவியான ஆதிரை இல்லமடைந்து, மாயக்கலத்திலே அவளிடமிருந்து

ஐயமேற்றாள்

18

இதன்பின் அவள் கலத்திலிருந்து உணவு எடுத்து வழங்கத் தொடங்கினாள். முதல் முதல் உணவேற்றது ஒரு வித்தியாதரன் மனைவியான காயசண்டிகை என்பவளே. ஆராப் பசியுண்டு பண்ணிய ஒரு நோயால் அவள் அல்லலுற்று வந்தாள். கலத்தி லிருந்து வழக்கப்பட்ட உணவை உண்டதும் அவள் மாயநோய் நீங்குதலுற்றுக் குணம் ஏற்பட்டது. அவள் ஆர்வமிக் கூர மணிமேகலையை வாழ்த்தினாள். அத்துடன் அருகிலுள்ள புத்த மடத்திற்குச் சென்று, அங்கே பெருந்தொகையாகக் குழுமிநின்ற ஏழைகளுக்கு உணவளிக்கும்படி அவள் மணிமேகலையைக் கனிவுடன் வேண்டினாள்!9

19

மணிமேகலை ஒரு பிக்குணி அல்லது ஆண்டிச்சி உடையில் புத்தமடத்திற்கு வந்திருக்கிறாள் என்று கேட்டதே, அவள் பாட்டி சித்திராபதி கடுஞ்சினம் கொண்டாள். உதயகுமாரனைத் தூண்டி அவளை அவன் பொற்றேரில் கொணர்விப்பேனென்று சூளுரைத்து, அவள் ஒரு சில பணியாட்களை உடன்கொண்டு இளவரசன் அரண்மனைக்கு விரைந்தாள். அரண்மனையில் நுழைவுற்று இளவரசன் முன்னிலையில் சென்றசமயம். அவன் ஒளிமிக்க அரிமான்கள் தாங்கிய இருக்கையில், இருபுறமும் நின்ற பணிப் பெண்கள் கவரி வீச, இனிதமர்ந்திருந்தான். அவன் காலடியில் வந்து வணங்கிய சித்திராபதியை நோக்கி அவன் புன்முறுவல் பூத்தான்.

"மாதவியும் மணிமேகலையும் இன்னும் மடத்தில் இருக்கவே விரும்புகிறார்களோ?" என்று கேட்டான்.

"வீரமிக்க இளவரசனே! நீ நீடு வாழ்வாயாக!" என்று வாழ்த்தி, சித்திராபதி பேசத்தொடங்கினாள். "மணிமேகலை இப்போது நகர்ப்புறத்திலுள்ள மடத்தைச் சேர்ந்த பொதுக் கூடத்தில் இருக்கிறாள். நீ அவளை உன்னுடன் இட்டுக் கொண்டுவந்து அவள் நடிப்புத்திறத்தைக் கண்டுகளிக்க வேண்டுமென்பது என் விருப்பம்,” என்றாள்.