பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

(283

அன்புக்குரிய நங்கையே! நீ ஒரு மடத்துப் பெண்துறவியாக விரும்புவதற்குக் காரணமென்ன?" என்று கேட்டான்.

முற்பிறப்பில் தன் அருமை இராகுலனாயிருந்தவன் அவன் என்பதை மணிமேகலை தெரிந்திருந்தாள். அவனிடம் தான் காண்டிருந்த காதல் தன் வலிமைக்கேடு காரணமாக எங்கே வெளிப்ட்டுத் தன்னைக் காட்டிக்கொடுத்துவிடுமோ என்று அவள் நடுங்கினாள். இவ்வாறு நடுங்கியவண்ணமே அவள் பேசத் தொடங்கினாள்:

“என் விளக்கம் கூறுகிறேன். நல்லறிவாளர் உரைகளினால் நீங்கள் பயன் அடைந்துள்ளீராதலின், கூறுகிறேன். கவனித்துக் கேட்பீராக."

"இந்த உடம்பு துன்பத்தின் இருப்பிடம். அது துன்பத்தில் பிறந்தது.நோயாலும் முதுமையாலும் துன்புற்று, துன்பத்திலேயே அணைந்துள்ளேன்.”

“தம் போன்ற வீரமிக்க ஓர் இளவரசனுக்கு இதற்குமேல் நான் என்ன கூற முடியும்?"

66

“என் சொற்களின் மெய்மை கண்டீரானால், பின் உம் நெஞ்சம் காட்டும் வழியைக் கடைப்பிடிப்பீராக,” என்றாள்.

இதன்பின் அவள் காயசண்டிகை என்ற துறவு நங்கை தங்கியிருந்த குடிலில் புகுந்து, உருமாறும் மந்திரத்தை உருச்செய்து காயசண்டிகையின் உருவம் பெற்று இளவரசனிடம் திரும்பி வந்தாள். மணிமேகலை மறைந்ததுகண்டு அவன் மலைப் புற்றான். குடிலுக்குட்சென்று தேடி அவளைக் காணாமையினால் ஏமாற்ற மடைந்தான். இன்னுரையாலும் மட்டற்ற அழகாலும் தன்னை வசப்படுத்தி விட்ட அந்நங்கையைப் பெறாது அவ்விடத்தை விட்டகல்வதில்லை என்று அவன் சூளுறுதி கொண்டான். 20

அக்கோட்டத்தின் சிலைகளில் ஒன்றிலிருந்து எழுந்த குரல் ஒன்று. 'வீணே சூளுரைபுகலாதே' என்று அவனை எச்சரித்தது. உதயகுமாரன் திகைப்படைந்தான். மணிமேகலையைப் பெறத்தான் வேறு என்னதான் செய்ய முடியும் என்று அவனுக்கு விளங்கவில்லை பொழுது சாய்ந்துவிட்டது. மாலையின்