ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்
287
மாதரைப்பாரும், இளவரசே!” என்ற அவள் அருகிலிருந்து ஒரு கிழவியைக் காட்டினாள். “ஒரு காலத்தில் மைக்கறுப்பாயிருந்த இருள் கூந்தல் இப்போது நரைத்து விட்டது. பளபளப்பான இவள் நெற்றி இப்போது கரிப்பு விழுந்துள்ளது. வில்லென வளைந்த இவள் புருவங்கள் செத்த நண்டின் கொடுக்குகள் போல் இருக்கின்றன. தாமரையுரையும் செவ்வரிக்கண்கள் இப்போது பீளைதள்ளி ஒளி மழுங்கியுள்ளன. முத்துப்பற்கள் பொலிவிழந்து கருகித்தேய்ந்துள்ளன. பவள இதழ்கள் நிறம் வெளிறி அழகிழந்துள்ளன. பெண்மையின் அழகு இருந்தவாறு இது!' என்றாள்.
இவ்வகையில் பேசி உலக அவாக்களிலிருந்து இளவரசன் எண்ணங்களை மாற்றி உயிர்க்குறுதியான நிலையான மெய்ம்மை களில் அவன் கருத்தைச் செலுத்த அவள் எண்ணினாள். ஆனால் அவளைத் தொடர்ந்து காயசண்டிகையின் கணவன் வந்து கொண்டிருந்தான். பொறாமை அவன் உள்ளத்தில் கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்தது. தன் மனைவி தன்னிடம் பாராமுகமாயிருந்ததுடன் இளவரசன் கருத்தைக்கவர முனைந்தது காண அவன் கொதித்தான். ஆகவே, அவள் நடத்தையை மேலும் கவனிக்க எண்ணி அவள் கோட்டத்தின் ஒரு ஒதுங்கிய மூலையில் பதுங்கியிருந்தான்.
மணிமேகலையே காயசண்டிகை உருவில் இருந்தா ளென்பதை இப்போது உதயகுமாரன் உணர்ந்து கொண்டான். ஆனால்,காஞ்சனன் ஏன் அவளைப் பின்தொடர்ந்தான் என்பதை அவனால் உணரமுடியவில்லை. அவனும் ரவில் அவள் நடத்தையைக் கூர்ந்து கவனிக்கத் தீர்மானித்தான்.ஆகவே அமைதி யாக அவன் அரண்மணைக்குத் திரும்பிச் சென்று, நள்ளிரவில் தனியே புறப்பட்டுக் கோட்டத்துக்குள் நுழைந்தான். ஆயினும்
ளவரசன் திருமேனியைச் சூழ்ந்த நன்மணம் எங்கும் பரவியதால், விழித்திருந்த காஞ்சனன் அவன் வரவை அறிய முடிந்தது.
அந்த நள்ளிருளில் தனியே வந்தவன் இளவரசன் என்பது காண, அவன் உள்ளத்தில் மனைவியின் நடத்தை பற்றி எழுந்த ஐயம் உறுதிப்பட்டது. பொறாமையால் கண் கால் தெரியாத நிலையில் அவன் வாளையுருவி அந்த இடத்திலேயே இளவரசனை