பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(294) ||.

அப்பாத்துரையம் - 26

பின்னர் நான் புத்தசமய தத்துவங்களை உனக்குப் போதிப் போன்," என்றார்.

அவர் போக எழுந்ததும், மணிமேகலை அவர் காலில் விழுந்து வணங்கி, தன் கருத்தைத் தெரிவித்தாள்:

“இந்நகரில் நான் இன்னும் சிறிது தங்கினாலும், மன்னன் மகன் மாள்வுக்கு காரணமாயிருந்தவள் என்று என்னை எல்லாரும் தூற்றுவார்கள் ஆகவே நான் ஆபுத்திரன் நாட்க்குச் செல்வேன். அங்கிருந்து மணிபல்லவத்துக்கும் பின் வஞ்சிக்கும் போவேன். வஞ்சியில் கண்ணகிக்கு ஒரு கோயில் எழுப்பப் பட்டிருக்கிறது என்று கேள்விப்படுகிறேன்,” என்றாள்.

அன்னையையும் பாட்டியையும் நோக்கி, “என் அருமை உறவினர்களே! என் பாதுகாப்பைப்பற்றி இனி நீங்கள் கவலை கொள்ள வேண்டாம்,” என்று கூறிவிட்டுப் புறப்பட்டாள்.

சம்பாபதி கோவிலுக்குச் சென்று, மணிமேகலை தேவியை வணங்கினாள். பின் வானில் எழுந்து பறந்து சாவகத்தில் ஒரு சோலையில் இறங்கினாள்.26 அச்சோலை மன்னன் தலைநகருக்கு வெளியே இருந்தது. அம்மன்னன் இந்திரன் மரபினன் என்று அந்நாளில் கருதப்பட்டது.

மணிமேகலை அச்சோலையிலிருந்த ஒரு துறவியை அணூகி வணங்கிச் செய்தி உசாவினாள். "இந்நகரின் பெயர் என்ன? இதனை ஆள்பவன் யார்?” என்று கேட்டாள். துறவி மறுமொழி பகர்ந்தான். “இது நாகபுரம். இதை ஆளும் மன்னன பூமிசந்திரன் புதல்வன் புண்ணியராசன். இவ்வரசன் பிறந்தநாள் முதல், மழை பொய்த்த தில்லை. பயிர்வளம் மிகுதி. நாட்டில் நோய் நொடி எதுவும் இல்லை,” என்றாள்.27

இதனையடுத்து அரசன் அறவுரை கோரித் தன் குடும்பத்துடன் தர்மசிராவகரைப் பார்க்கச்சென்றிருந்தான். துறவியருகே அழகிய ஓர் இளமங்கை அமர்ந்திருப்பதுகண்டு அவன் வியப்படைந்தான். “ஆண்டி போன்ற தோற்றத்துடன் புத்தர் அருளறம் கேட்க வந்திருக்கும் ஒப்புயர்வற்ற இவ்வழகி யார்?" என்று கேட்டான். மன்னர் பணியாளருள் ஒருவர் விளக்கம் தந்தார். "இந்தச் சம்புத்தீவத்தில் இந்நங்கைக்கு ணையாவார் யாரும் இல்லை. நான் காவிரிப்பட்டினத்துக்குச்