பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(296

அப்பாத்துரையம் - 26

மறையுமென்றும், மீண்டும் பஞ்சம் புகந்து விடும் என்றும் அஞ்சுகிறோம். பிற உயிர்களுக்கும் இரக்கம் காட்டுவதே புத்தர்பிரானால் போதிக்கப்பட்ட முதற் கடமை. உங்கள் குடிகளிடம் உங்களுக்குள்ள இக்கடமையை நீங்கள் மறந்தீர்கள் போலும்!" என்றான்.

"எப்படியும் நான் மணிபல்லவம் சென்று காண ஆர்வம் கொண்டுவிட்டேன். அங்கே போகாமல் என் மனம் ஆறப் போவதில்லை. ஒருமாத காலமாவது நீ ஆட்சியையும் அரண் மனையையும் பார்த்துக்கொள்ளவேண்டும்," என்று அரசன் கூறினான். தன் கடற்பயணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யும் படியும் கட்டளையிட்டான்.

கப்பல் ஒருங்குவிக்கப்பட்டதும் அரசன் கப்பலேறி, சார்தகவுடைய காற்றுடன் மணிபல்லவத்தில் வந்திறங்கினான். மணிமேகலை மனமார்ந்த மகிழ்ச்சியுடன் அரசனை வரவேற்று அவனைப் புத்த பீடிகைக்கு இட்டுச் சென்றாள். மன்னன் பற்றார்வத்துடன் பீடிகையைச் சுற்றி வலம்வந்து வணங்கினான். உடனே நிலைக்கண்ணாடியின் நிழற் படிவம் போலத் தெளிவாக அவன் முன்னைப் பிறப்பு அவன் உணர்வுமுன் தோன்றிற்று.

அவன் உள்ளத்தில் உணர்ச்சிகள் உடனே பீறிட்டெழுந்தன.

“தமிழகத்தில் தென்மதுரையகத்துக் கல்விக்கிறைவியே! இதோ என் முற்பிறப்பறிந்தேன்; என் கவலைகளகன்றேன். உன் கோயிலின்கண்ணே ஒருநாள் மழைக்கால இரவின்போது பெருந்தி ரளான இரவலர் என்னிடம் வந்து உணவு கோரிய சமயம், அவர்களுக்கு அளிக்க உணவில்லாமல் திகைத்து நின்றபோது, எத்தனைபேருக்கு வேண்டுமானாலும் உணவு பரிமாற உதவத்தக்க தெய்விக ஆற்றலுடைய ஓர் உண்கலத்தை நீ என் கையில் தந்தருளினாய்? சென்றகாலத்தில் உன்னை வணங்கியது போலவே வருங்காலத்திலும் நான் வழிபடுவேன்,” என்றான்.

பீடிகையிடம் விடைபெற்று மணிமேகலையுடன் அவன் ஒரு புன்னைமர நிழலில் அமர்ந்தான். பீடிகையின் காவல் தெய்வமான தீவதிலகை அவர்கள் முன்வந்து அரசனை நோக்கி வாய்மொழி பகர்ந்தாள்.