(304
அப்பாத்துரையம் - 26
இவற்றின்பின்னும் போகவே அவன் துணிவு கொண்டா னானால், பெண் தன்னையும் உடன்கொண்டேகும்படி வேண்டுகிறாள். ஆனால், மெல்லியல்வாய்ந்த அவ்விள நங்கையால், அவ்வளவு நீண்ட கடும்பயணத்தை மேற்கொள்ள முடியாதென்று அவன் வாதிடுகிறான்.அப்போது அவள், காட்டில் மான் கலையைப் பின்தொடர்வதைச் சுட்டிக்காட்டுகிறாள்.
"நீங்கள் போனபின், உங்களையே நினைந்து நினைந்திருந்து, உணவு நீர் வெறுத்து நான் இறந்துவிடுவேன். என் உள்ளம் இப்போது உங்கள் நெஞ்சில் சிறைப்பட்டுக் கிடக்கிறது. அதை நீங்களே வைத்துப்பேணாமல் என்னிடமே அனுப்பினால் எனக்குத் துயர் உண்டாவது உறுதி. நீங்களே அதை வைத்திருங்கள்” என்று அவள் மல்லாடுகிறாள். இதுகேட்டுக் காதலன் செயலற்றவ னாகிறான். காதலி காதலனுடனே உடன்போக்கு நிகழ்த்துகிறாள்.
5
இளநங்கையின் தாய் மகளைத் தேடப்புறப்பட்டு, வழியில் கண்ணுறும் வழிப்போக்கரிடமெல்லாம் ஓர் இளைஞனைத் தொடர்ந்து ஓர் இளநங்கை செல்லுவதைக் கண்டதுண்டா என்று உசாவுகிறாள். தன்னைக் காதலித்த இளைஞனுடன் சென்றதில் அணங்குசெய்த தகாச்செல் எதுவுமில்லை என்று அறிவுரைகூறி வழிப்போக்கர் அவளுக்கு ஆறுதல் கூறுகின்றனர். அவர்கள் அறிவுரை வருமாறு:
'கடலில் பிறக்கும் முத்தினால், கடலுக்கு என்ன பயன்? மலையிலே வளரும் சந்தணத்தினால், மலைக்கு என்ன பயன்? பவளப் பாறையிலே உருவாகும் பவளத்தினால், அந்தப்பாறைக்கு என்ன பயன்? அவ்வவற்றை அணிபவர்க்குத்தான் அவை பயன் படக்கூடும். வ்வகையிலேயே உங்கள் புதல்வியும் தான் விரும்பிய ஆடவனுடன் சென்றிருக்கிறாள்.”6
சிலநாள் துறந்திருந்தபின், நங்கை தன் காதலனை உடன் கொண்டு தன் வீட்டுக்குத் திரும்பிவருகிறாள். இளந்துணைவர் வழக்கமான வினைமுறைகளுடன் திருமணம் செய்விக்கப் பெறுகிறார்கள்.
காதலன் மன்னன் பணியைமுன்னிட்டு, திடுமெனப்பிரிய நேர்ந்ததால், அணங்கு உளம் நைவுறுகிறாள். அவள் தன்