(306
அப்பாத்துரையம் - 26
இதன்பின் இன்னொரு சேரலாதன் கரிகால சோழனால் முறியடிக்கப்பட்ட வெண்ணிற் போரிலும் அவர் உடனிருந்தார். புலவர் கபிலர் அவரைத் தம்மினும் மூத்த ஒரு புலவராகக் குறிப்பிடு வதுடன், இருங்கோவேள் கழாத்தலையை மதிக்காததாலேயே அவன் நகராகிய அரையம் அழிக்கப் பட்டதென்றும் தெரிவிக் கிறார். புறநானூற்றில் இவர் இயற்றிய ஆறு பாடல்கள் நமக்குப் பேணித் தரப்பட்டுள்ளன!"
11
உருத்திரன்கண்ணனார் (கி.பி.40-70) : இவர் பெரும் பாணாற்றுப்படை, பட்டினப்பாலை ஆகிய இரு பாடல்களின் ஆசிரியர், முந்தியது கிட்டத்தட்ட கி. பி. 50-ல் காஞ்சி அரசன் திரையன் சோழ அரசுக்குரியவனாய் இருக்கும்போது பாடப் பட்டது. மேலீடாக, அது மன்னன் திரையனின் புகழுரையா யினும், அது பெரிதும் ஒரு முல்லைநில வாழ்க்கை ஓவியத்தின் பண்புடனேயே இயங்குகின்றது.
உமணர் தம் குடும்பத்துடன் மாட்டுவண்டிகளில் சாரிசாரியாகப் பயணம் செய்வது; மிளகுமூட்டை ஏற்றிய வண்ணம் பொதி கழுதைகள் கும்புகும்பாகக் கடப்பது;வேட்டுவர், ஆயர், உழவர் உறைவிடங்களாகிய சிற்றூர்களின் வாழ்வு; துறை முகங்களில் கப்பல்கள் நெருக்கமாக இறங்கி நிற்பது, தலைநகரம் காஞ்சி ஆகிய மன்னன் நாட்டின் பல்வேறு காட்சிகளை விரைத்துரைக்கிறது.
பட்டினப்பாலை ஏறத்தாழ கி. பி. 70-ல், கரிகால்சோழன் அரசிருக்கை ஏறி, பல குழந்தைகளின் தந்தையாய் இருந்த சமயத்தில் இயற்றப்பட்டது. அது கரிகாலன் தலைநகரான காவிரிப்பட்டி னத்தின் புகழ் பாடுகின்றனது. காவிரியால் வளமுறுத்தப்பெறும் செழுங்கழனிகள், நகரைச்சூழ்ந்த வயல்கள், சோலைகள், கடல் துறைமுகம், அதிலுள்ள இடமகன்ற கப்பல் தங்குதுறைகள், சந்தைக்களம், அதன் அகலச்சாலைகள், நகரின் கோட்டை கொத் தளங்கள், திருமாவளவன் அல்லது கரிகால் சோழனின் வீரதீர வெற்றிகள் ஆகியவற்றை அது நீள விரித்துரைக்கிறது.
முடத்தாமக்கண்ணியார் (கி. பி. 60-90) : இவர் கரிகால் சோழனைப் பராவிப் பொருநராற்றுப்படை பாடினார். இளமை யிலேயே கரிகாலன் சிறையிலிருந்து தப்பியது பற்றி அவர்