ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்
307
குறிப்பிடுகிறார். அவன் வெண்ணில் போர் வெற்றிபற்றியும் அவன் அவைக்கு வந்த பாணர்புலவர்களை அவன் வள்ளன்மை யுடனும் பண்புடனும் நடாத்தியது பற்றியும் அவர் குறிப்பிடுகிறார்.
கபிலர் (கி. பி. 90-130) : இவர் பிறப்பில் பார்ப்பனர், தொழிலால் புலவர். கரிகாலசோழன் மகளை மணந்த சேர அரசன் ஆதன் அரசவையில் இவர் சிலகாலம் இருந்தார். அரசன் அவர் மீது மிகவும் உவப்புற்று அவருக்குப் பல ஊர்களை இறைவிலிக் கொடையாகக் கொடுத்தான்.12
புலவர்களுக்கு வழங்கும் வண்மையில் பேர்போன பாரியின் புகழலால் கவரப்பட்டு, அவர் அவனைப் பார்க்கச் சென்று, விரைவில் அவன் அவைப்புலவராகவும் மாறா நட்பினராகவும் அமர்ந்தார்.புகழுரைக்கலையில் துறை போனவராதலால், எங்கே சென்றாலும் அவர் சிறப்பே பெற்றார். தம் புரவலர்களைப் புகழ்ந்து அவர் பாடிய பாட்டுக்களிலிருந்து அவர் சொல்நயமும் கருத்து நுட்பமும் உடையவரென்று தோற்றுகிறது. புரவலர் வீரத்தையும் வண்மையையும் புகழ்வதில் அவர் சொல்திறம் வியக்கத் தக்கது. இவ்வுரைகள் மிகையுயர்வு நவிற்சியாகவே இருந்தாலும்கூட, சொல்லளவில் முழு வாய்மையாகவும் அமைந்திருந்தன.
பாரி இறந்தபின் அவர் பாரியின் புதல்வியரை விச்சிக்கோன், இருங்கோவேள் ஆகிய வேளிரிடம் கொண்டு சென்று மணஞ் செய்விக்க முயன்றார். இந்நோக்கத்தில் வெற்றியடையாததால் அவர் பெண்களைப் பார்ப்பனருக்குக் கொடுத்துவிட்டுப் பட்டினி கிடந்து உயிர்விட்டார்.13
பெருங்குறிஞ்சி என்ற அவர் என்ற அவர் பாடல் தமிழகத்து மலங்குடியினரின் காதற்கதை ஒன்றை விரித்துரைக்கிறது. ஆரிய அரசன் பிரகத்தனுக்குத்4 தமிழ் அறிவுறுத்தும்படி அது இயற்றப் பட்டதாகக் கூறப்படுகிறது.
அவரால் இயற்றப்பட்ட மற்றொரு பாடல் இன்னா நாற்பது. ஒவ்வொரு பாட்டிலும் நான்கு தீங்குகளை உள்ளடக்கிய 40 பாட்டுக்களையுடைய அறநூல் இது.
இந்நூலின் மாதிரிக்காக, அதன் மூன்று பாட்டுக்களின் கருத்துக்கள் கீழே தரப்பட்டுள்ளன.