பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




310 ||____

அப்பாத்துரையம் - 26

காரியைப் புகழுமிடத்திலே மாறோக்கத்து நப்பசலையார் 'திருநிலைவாய்ந்த உள்ளத்தினனாகிய அந்தணன் உன்னைப்பற்றி அத்தனை முழு நிறைவாகப் புகழ்ந்துவிட்டதனாலே மற்றப் புலவர்களுக்குப் புகழும்படி எதுவும் மிச்சமில்லாமல் போய்விட்டது' என்றும்2' இவரைப்பற்றிப் புகழ்ந்துள்ளார்கள்.

21

நக்கீரர் (கி. பி. 100-130) : இவர் மதுரையிலுள்ள ஒரு பள்ளியாசிரியர் புதல்வர். அவர் தம் பாடல்களில் சோழ அரசர் கரிகால்வளவனையும் கிள்ளிவளவனையும் பாண்டிய அரசன் நெடுஞ்செழியனையும், சேர அரசன் வானவரம்பன் என்ற ஆதனையும் குறிப்பிட்டுள்ளார். அவர் பாடியவற்றுள் இரண்டு பாடல்கள்தான் இப்போது கிடைத்துள்ளன. அவை திருமுரு காற்றுப்படை, நெடுநெல்வாடை ஆகியவையே.

முன்னதாகிய திருமுருகாற்றுப்படையில் அவர் பரங்குன்று, அலைவாய், ஆவினன்குடி, ஏரகம், பழமுதிர்சோலை என்ற இடங்களில் வணங்கப்படும் ஆறு தலையும் பன்னிரு கைகளும் வாய்ந்த போர்க்கடவுளான முருகனைப் புகழ்கிறார்.

பின்னதாகிய நெடுநல்வாடையில் மதுரைமாநகரின் நீண்ட குளிர்கால இரவு விரித்துரைக்கப்படுகிறது. கூதல் வாடை கமுகின் சோலைவழியாக மதுரையின் அகன்ற தெருக்களில் வீசுகின்றது. கூதல்காற்றைத் தடுக்கும் முறையில் எங்கும் வாயில்களும் பல கணிகளும் பொருந்தச் சார்த்தித் தாளிடப்பட்டுள்ளன.படுக்கை யறைகளில் தணப்புத் தீ கனன்றுகொண்டிருக்கிறது.

பாண்டியன் அரண்மனையில் அரசி தன் படுக்கையில் உறங்காத கண்களுடன் புரண்டுகொண்டிருக்கிறாள். அயலர சருடன் போரிடும்படி படையுடன் சென்ற அரசனையே அவள் நினைந்து நினைந்து வருந்துகிறாள். கண்களில் நீர்ததும்பி, கன்னங் களின் வழியாக ஒழுகுகின்றன. அதேசமயம் பகைப் புலத்தில் கூடாரமிட்டுத் தங்கியுள்ள பாண்டிய அரசனும் உறக்கமில்லா நிலையில்தான் இருக்கிறான். ஆயினும் அவன் அரசியை நினைத்துக் கொண்டிருக்கவில்லை. அவன் போரில் புண்பட்டவர்களைப் பார்வையிட்டும் அவர்கள் புண்ணாற்று வதற்காகவும் கூடாரத்தின் பாதுகாப்புக்காகவும் கட்டளைக ளிட்டு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்வதில் மிகவும் ஈடுபட்டிருக் கிறான்.