ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்
311
இரண்டு பாடல்களும் நல் திறம்வாய்ந்த கருத்து வளமும் சீரிய சொல்நயமும் வாய்ந்தவை.
இவை தவிர அவர் இயற்றிய பல தனிச்செய்யுட்களும் புறநானூறு, அகநானூறு. குறுந்தொகை. நற்றிணை ஆகிய தொகை நூல்களில் காணப்படுகின்றன.
நக்கீரர் பாடல்கள் அவர் காலத்திய நிகழ்ச்சிகள் பற்றிய பல குறிப்புக்கள் நிரம்பியவை. தம் புரவலரைப் புகழ்ந்து மகிழ்விப்பது ஒன்றையே நோக்கமாகக் கொண்ட பொதுநிலைப் புலவர் அல்லர் அவர் என்பதை அப்பாடல்கள் காட்டுகின்றன. அத்துடன் அவர் அகன்ற புலமையையும் அவை விளக்குகின்றன. அப்புலமைத் திறத்துக்கு மாளா நினைவுச்சின்னங்களாகவே அவர் அப்பாடல் களைப் படைத்துள்ளார் என்பதும் தெற்றெனத் தெரிகிறது.
நக்கீரர் பாடல்களிலிருந்துமட்டுமே நாம் தெரியவரும் செய்திகள் பல. இவற்றில் சில வருமாறு :-
நாடோடிகளான குறும்பர்களைச் சோழன் கரிகாலன் குடிவாழ்நர் ஆக்கினான்22 பாண்டியன் நெடுஞ்செழியனால் ஏழு அரசர்தலையாலங்கானத்தில் முறியடிக்கப்பட்டனர். அவர்கள் பெயர்களும் குறிக்கப்பட்டுள்ளன.23 அதே பாண்டிய அரசன் சேர நாட்டின் மீது படையெடுத்து மேல்கடற்கரையிலுள்ள முசிறி (டாலமியின் முஸிரிஸ்) வரை சென்றான்24. பாண்டியநாட்டின் மீது படையெடுத்த சோழன் கிள்ளிவளவனின் பெரும்படையை மதுரைமதிலினருகே பழையமாறன் முறியடித்தான்.25
சொற்களைத் தேர்ந்தெடுத்துத் தம் கருத்துக்களுக்கேற்ற தகுதிவாய்ந்த தொடர்களை வழங்குவதில் அவர் தனித்திறம் உடையவர். அவர் நடை எப்போதும் வீறும் நயமும் உடைய தாகவே உள்ளது. ஆயினும் தம் கல்வியகலத்தைப் பகட்டாகக் காட்டுவதில் அவர் ஆர்வமுடையவர். இப்புலமை அடிக்கடி காழ்க்கொண்டபுலமைத்தருக்கின் அளவுக்குச் சென்றுவிடுகிறது.
திருமுறுகாற்றுப்படை யல்லாமாலும் சைவத்திருமுறை களில் பதினோராவது திருமுறையில் வெறும் ஒன்பது சிறு நூல்கள் நக்கீரருக்குரியனவாகக் குறிக்கப்பட்டுள்ளன. ஆயினும் அவற்றின் மொழிநடை மிகப் பிற்காலத்ததாகத் தோற்றுவ