(318) ||
அப்பாத்துரையம் - 26
களெல்லாம் அவற்றில் இவர்ந்தோருடன் வெட்டிச்சாய்க்கப் பட்டன. தேர்மீது சென்ற படைத்லைவர்கள் அனைவரும் இறந் தொழிந்தனர். அவர்கள் முகங்கள் அவர்கள் கேடயங்களிலே புதையுண்டன. முரசறைபவர் எவரும் உயிருடனில்லாததால் பாரிய இடிமுழங்கும் முரசங்கள் பாரிடத்தில் உருளுகின்றன.”
"மணம்பொருந்திய மார்பகங்கள் நீண்ட வேல்களால் துளைக்கப்பட்டு போரின் இருதிறத்து அரசர்களுமே களத்தில் விழுந்துகிடக்கின்றனர்”
66
'அந்தோ! அல்லிக்காம்பால் வளைசெய்தணிந்து கொண்டு உழவாரணங்குகள் குதித்தாடி விளையாடும் குளிர்ச்சி பொருந்திய ஆறுகளையுடைய அவர்கள் செழிப்பு வாய்ந்த நாடுகள் இனி என்னா னி என்னாவது?'”57
பெருங்கௌசிகனார் (கி. பி. 100-130) : : இவர் பெருங்குன்றூரில் பிறந்தவர். இவர் செங்கண்மாவின் தலைவன் நன்னன் மகன் நன்னனைப் புகழ்ந்து மலைபடுகடாம் என்ற பாடல் இயற்றியவர்.58
நவிரமலையின் விழுமிய தோற்றமிக்க காட்சிகள்; பாறைகள் மீது வந்து விழும் அருவிகளின் கல்லென்ற இரைச்சலால் மலையின் பக்கங்களில் எழும் இடைவிடா முழக்கம்; யானை பயிற்றுவிப் போரது கூக்குரல்கள்; தினையிடிக்கும் பெண்டிர் வள்ளைப் பாட்டுக்கள்; கரும்பாலைகளின் இரைச்சல்; தத்தம் பெண்டிருடன் குடித்தாடும் மயக்கவெறியிலுள்ள குறவரால் அடிக்கப்படும் முரசொலி; இறந்த வீரரின் நினைவுக்காக வீரச்செயல் எழுதப்பட்டு நிறுவப்பட்ட நடுகற்கள் பாதைகளின் சந்திப்பில் செல்லும் டங்களின் பெயர்கள் வரைந்த கைகாட்டி மரங்கள்; குறவரின் வேளாண்மை; மலையிலிருந்து குதிகொண்டு சுழித்தோடும் செய்யாற்றின் வேகமான பாய்ச்சல் வாளும் வேலும் தாங்கிய வீரர்களால் காவல் செய்யப்பட்ட கோட்டைவாயில்கள் ஆகிய வற்றை அவர் சொல்வளம்படப் பாடுகிறார்.
பாடகர்களை நன்னன் வரவேற்கும் முறைபற்றிப் புரவலர் புகழ்ந்துபாடுகிறார். அவன் அவர்களை நயமுடன் எதிர் கொண்டழைத்து, அவர்கள் வருந்தி மலையேற நேர்ந்ததே என்று