பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(334

60.

61.

62.

63.

அப்பாத்துரையம் - 26

கொள்ளத்தக்க ஒளவையாராகக் கூட இருக்கமுடியாது என்றே கூறத்தகும். அதற்கு முற்பட்டவரல்லர் என்பதை நல்வழியில்,

"தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்

மூவர் தமிழும் முனிமொழியும் கோவை திருவாசகமும் திருமூலர் சொல்லும் ஒருவாசக மென்றுணர்"

என்ற வெண்பாவே காட்டவல்லது. மற்றும் 'ஙப்போல் வளை' என்ற ஆத்திசூடி வாசகம் நன்னூலார் விதியை நினைவூட்டுகிறது. நன்னூலார் காலம் 12 ஆம் நூற்றாண்டு ஆகும். ஆகவே, ஆத்திசூடி பாடிய ஔவையார் திண்ணைப் பள்ளிக் கூடங்கள் ஏற்படத் தொடங்கிய காலமான 16ஆம் நூற்றாண்டுக்கோ 14ஆம் நூற்றாண்டுக்கோ தான் உரியவராயிருத்தல் கூடும்.

பாபிங்டனின் செந்தமிழ் இலக்கணம் (Babington's Chentamil grammar) முன்னுரை பக்கம் II”.

ஸெனெக்கா இலத்தீன் மொழியின் அறிவுரைக் கவிஞர். கவிதையில் நீதிநூல் யாத்தலில் வல்லவர். இத்துறை உலக இலக்கியத்தில் அருகலானது ஸெனக்காவன்றி, தமிழ்க் கவிஞர்களும் பாரசிக ெமாழியில் ஹஃவீஸும் சீனமொழியல் கன்ஃவூசியசுமே இத்துறையின் முக்கிய கவிஞராவர். இச்சிலருள்ளும் நீதிச்சிறப்புடன் கவிதைச்சிறப்பும் ஒருங்கே அமயப் பெற்றவர் மிக அரியரே என்னலாம்.

'பொன் நெடுங்கணக்கு' (Golden Alphapet) என்ற ஆங்கில மரபின் வழக்குத்தொடரின் பொருள் நெடுங்கணக்கு வரிசையில் எழுத்துக்களைச் சொல் முதலாகக்கொண்ட அறிவுரைத் தொகுதி என்பதே ஆகும். ஆத்திசூடி கொன்றை வேந்தன் பாடிய ஒளவையார் மிகப்பிற்கால ஔவையாரானால் கூட அந்நூல்களே உலகின் மிகப் பழமையான "பொன் நெடுங் கணக்கு' என்பதில் ஐயமில்லை.

ஆசிய புத்தாராய்வுகள் (Asiatic Researchers) VII பக்கம் 350 (இலண்டன் பதிப்பு)

புறம், 80

64.

65.

புறம், 390.

66.

புறம், 94.

67.

புறம், 91

68.

புறம், 95.

69.

புறம், 235.

70.

புறம், 392.

71.

புறம், 367

72.

அடிக்குறிப்பு 2 பக்கம் 360 பார்க்க.