14. அறுவகை மெய்விளக்கக் கோட்பாடுகள்
மணிமேகலை என்னும் தமிழ்க்காப்பியம் தரும் அறுவகை மெய்விளக்கக் கோட்டுபாடுகளின் விவரம் மிகவும் சுவையார்வம் தூண்டத்தக்கது. இந்தியாவின் பண்டைய மெய்விளக்க முறை களாக நமக்கு வந்தெட்டியுள்ளவற்றின் விளக்க விவரங்கள் பலவற்றி னுள்ளும் அதுவே காலத்தால் முந்தியது. அதேசமயம் இன்று நாம் அறிந்துள்ள ஆறு முறைகளிலிருந்து பலவகைகளில் அது வேறுபட்டதாகும்!
மணிமேகலை தரும் விளக்கங்களின் சுருக்க விவரம்
வருமாறு!
பொருள்களின் மெய்யிய்ல்பை உணரும் ஆர்வத்துடன் மணிமேகலை பல்வகை மெய்விளக்கத்துறை ஆய்வுரையாளரை அணுகினாள்.
முதலில் வேதவாதியை அணூகி, அவன் கொள்கைகளை விளக்கிக் கூறும்படி கேட்டாள்.
(i) வேதவாதி கூறியதாவது:2
3
பொருள்களின் சரிநுட்பமான அறிவு (அளவை அறிவு, பிரமாணம்) பத்து வகை துறைகளால் (அளவைகளால்) பெறப்படும்.
பத்து அளவைகளாவன:
1. புலனறிவு [காட்சி, காண்டல்]4
2. உய்த்தறிவு [கருதல், கருத்து, அனுமானம்]5
3. ஒப்புமை (உவமம்]6
4. மேற்கொள் [ஆகமம்]7