ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்
5. அவாய்நிலை [குறிப்பு, அருத்தாபத்தி] 6. தகுதி [இயல்பு]
8
7. உலகுரை [மன்னுரை, மரபுரை, ஐதிகம்]10
8.
கூடாமை [இன்மை, அபாவம்]11
9. மறிநிலைமெய்மை [ஒழிபு, மீட்சி]12
1337
10.தொடர்பியைவு [உள்ளநெறி, எய்தியுண்டாம் நெறி]13 இவற்றுள் வேதவியாதர், கிருதகோடி, ஜெமினி ஆகிய ஆசிரியர்கள் முறையே பத்தும் எட்டும் ஆறும் கொண்டனர்!4
முதல் அளவை : புலன் அறிவு
சரியான புலனறிவு [காட்சியளவை] ஐவகைப்படும். அவை கண்ணால் வண்ண உரு அறிதலும்; செவியால் ஓசை யறிதலும்; 15 மூக்கால் மணம் அறிதலும்; நாவாற் சுவையறிதலும்; மெய்யால் ஊறுணர்வறிதலும் ஆகும்.
இவற்றை உணர்வதில் (உணரும்)" உயிர்த் திறமும், (உணர் கருவிகளான) புலன் திறமும், (உணர்வை உண்ணின்றியக்கும் உட்கருவியான) மனத் திறமும் நன்னிலையில் இருத்தல் வேண்டும். (இது பின்னணிநிலை). ஒளியின் (ஞாயிறு, திங்கள், தீ போல் வனவற்றின்) துணைவேண்டும் (இது துணைநிலை). இட அறிவு சார்ந்த இழுக்கு நேர்தல் கூடாது. அத்துடன் தப்பெண்ணம் (தவறான கருத்து, திரிபு விபரீதம்]7, பொருந்தாமை [இசை வின்மை, முரண், மாறுகோள்]18, ஐயுறவு [கவர்க்கோடல்]19, ஆகிய இழுக்குகளும் இருத்தல் கூடாது (இந் நான்கும் வழாநிலைகள்). இவற்றின் வழியாக இடம் [தேசம்]20, பெயர் [நாமம்]21, இனம் [சாதி]2, பண்பு [குணம்]3, செய்கை [கிரியை]24, ஆகிய (ஐந்து) கூறுகளையும் வரையறுத்துப் பொருளையறியும் அறிவு காட்சியளவை யாகும்.25
இரண்டாம் அளவை : உய்த்தறிவு
உய்த்ததறிவு (கருத்தளவை, அனுமானம்] என்பது ஒரு பொருளின் இயல்பை நாம் அறிய உதவும் உள உணர்வுமுறை ஆகும்.26