ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்
343
அவற்றின் மாறுதலெல்லாம், இயக்கம், உயர்தல், தாழ்தல் ஆகியவையே.
செறிவுற்றபோது அவை பாரிய மலையாகலாம். பிரிவுற்ற போது அவை அணுக்களாக அகலிடத்தில் பரவலாம். வயிரமாக அவை திண் செறிவுறலாம். மூங்கில் போல உள்ளே பொள்ளலா
கலாம்.
பேரளவான உருக்களாக அவை திரளும்போது, அவை (ஒன்றுடனொன்று) கூடுதல் குறைவீதமாகவோ, சமமாகவோ இருக்கலாம். அல்லது ஒன்றே முழுமையாகவோ, ஒன்றுட னான்று முக்கால், அரை, கால் என்ற வீதமாகவோ அமையலாம். ஒவ்வொரு பொருள் திரளும் அதில் அதில் அடங்கியுள்ள மிகப் பெரும் பான்மை அணுவகைகளை ஒட்டிப் பெயர் அடைகின்றன.
இப்பண்புகள் அவற்றினிடம் இல்லையென்றால் அவை நிலம் போலத் திட்பமாகவும், நீர்போல ஒழுகலாகவும், அனல் போல எரிவதாகவும், உலவைபோல உலவுவதாகவும் இயங்க
முடியாது.
தெய்விக ஆற்றல்வாய்ந்த கண்கள் உடையவரன்றி வேறு எவரும் தனியணுக்களைக் காணமுடியாது. அரையிருளில் மக்கள் ஒரு தனி மயிரைக் காணமுடியாது.ஆயினும் அந்நிலையிலும் ஒரு மயிர்க்கற்றையைக் காணமுடியும். அதுபோலவே பருவுடலுடை யோர் தனியணுவைக் காண முடியாது. (அணுத்திரளையே காண முடியும்).
ஆன்மாக்கள் ஆறு வண்ணங்களுடைய உடம்புகளில் பிறக்கின்றன. அவ்வண்ணங்கள் கருமை, நீலம், பசுமை, செம்மை, பொன்மை, வெண்மை என்பன. தூய வெண்ணிற உடலில் பிறந்தபோதே ஆன்மாக்கள் விடுதலை பெற்றுப் பேரின்பம் எய்த முடியும்.விடுதலை பெறாத உயிர்கள் சக்கரத்தில் சுழலும் பகுதிகள் போலப் பிறப்பின் படிமுறைகளில் கீழிறங்கி ஏறி உழலும்.
ஆதாயம் அடைவது, அழப்புறுவது; தோல்வியடைவது, வெற்றி பெறுவது; இன்ப துன்பங்கள் உணர்வது; கூடுவது, கூட்டிற் பிரிவது; பிறப்பது, இறப்பது ஆகிய இத்தனையும் உடல் கருக் கொண்டபோதே ஊழ்த்திற உரிமைப்பட்டுவிடுகின்றன.