(352) ||
காரண இலக்கணம்
அப்பாத்துரையம் - 26
சரியான காரணம் மூவகைப்பட்டது. அது முனைபுரை சார்ந்து அதனை அடிப்படையாகக் கொண்டு இயங்கலாம். இரண்டாவதாக, அது இணைவுரை73சார்ந்ததாகலாம். அல்லது மறிநிலையுரை4 சாரந்ததாகலாம். ணைவுரை சார்ந்ததாயின், இணைவு முழுநிறை தொடர்பிணைவு75 உடையதாதல் வேண்டும்.
அது
எடுத்துக்காட்டாக, 'ஓசை என்றுமுள்ள தல்லாதது2 என்ற வாசகத்தை முணைபுரைப்படுத்துவதாக வைத்துக்கொள்வோம். (இணைவுரை மூலமான காரணத் தொடர்வு) குடம்போல என்று முள்ள தல்லாதது எனலாம். அது ஒரு மறிநிலை வாசகம் சார்ந்த தானால், வாசகம் இவ்வாறாகலாம். 'என்றுமுள்ள பொருள் எதுவும், விசும்பைப்போல, இயற்றப்படாத ஒன்று ஆகும்'. செய்யப்படுவது, செய்யப்படும்போது புதிதாகத் தோற்றுவது என்பது என்று முல்ல தல்லாத தன்மைக்குரிய நேரான காரணம் ஆகும். இது முனை புரை, இணைவுரை, மறிநிலை ஆகிய மூன்றுக்குமே பொருந்தும்.'
ஒப்புமை இலக்கணம்
சரியான ஒப்புமை இருவகைப்படும். அது நேர்நிலையாய்6 இருக்கலாம். மறிநிலையாய்” இருக்கலாம். நேர்நிலை வகைக்கு எடுத்துக்காட்டு, "என்றுமுள்ளதல்லாத பண்பு எப்போதும் குடம் போன்றவற்றுடன் இணைவுடையது" என்பது. மறிநிலைவகை காரணம் (ஏது) இல்லாதபோது பயன் (பயனிலை அல்லது குறித்துரை) என்பதும் கிடையாது என்று காட்டுவதாகும். (வாதங்களில்) வை பிழையற்ற முன்கூற்று வாசகங்கள்78
ஆகும்.79
பொருள்களின் இயல்பு பற்றிய சரியான அறிவு கைவரப் பெறும் வகைதுறைகளை விளக்கியபின், புத்த மடத்துத் தலைவர் புத்தர் பெருமானின் கோட்பாடுகளை விரித்துரைக்கத் தொடங்கினார்.
புத்தர்பெருமானின் கோட்பாடுகள் வருமாறு:
முன்னொருகால் (இவ்வுலகில்), புலனறிவுடைய உயிர் களிடையே மெய்யறிவுத்திறம் முற்றிலும் இல்லாதிருந்த சமயத்தில்