பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/378

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

உணர்வினின்னு பெயர், உருத் தோன்றுகின்றன.

357

பெயர், உருவினின்று பொறிபுலன்கள் எழுகின்றன. பொறிபுலன்களிலிருந்து தொடர்பு உண்டாகிறது.

தொடர்பிலிருந்து புலனுணர்வு உண்டாகிறது.

புலனுணர்விலிருந்து வேட்கை தோன்றுகிறது.

வேட்கையிலிருந்து பற்று எழுகிறது.

பற்றிலிருந்து வாழ்வு உண்டாகிறது.

வாழ்விலிருந்து பிறப்பிறப்புத் தொடர் சுழல் ஏற்படுகிறது. பிறப்பிலிருந்து மூப்பு, பிணி, சாக்காடு, துன்பம் [அவலம்], அழுகை (அரற்று], கவலை, மனமுறிவு [கையறு] ஆகியவை தொடரும்.

இம் முறையே பற்று ஓயாது சுழற்சியுறும் செயல் (எதிர் செயல்) வட்டத்தை இயக்கிவிடுகின்றது.

மடமை அழிய, செயல் ஓயும்.

செயல் ஓய, உணர்வு அவியும்

உயர்வு அவிய, பெயர், உருக் கெடும், பெயர் உருக் கெட, பொறிபுலன் மாயும்.

பொறிபுலன் மாய, தொடர்பு சாயும்.

தாடர்பு சாய, புலனுணர்வு அழியும்.

புலனுணர்வு அழிய, வேட்கை அறும்.

வேட்கை அற, பற்று இலதாகும்.

பற்று இலதாக, வாழ்வு நீங்கும்.

வாழ்வு நீங்க, பிறப்புத் தொடர்பறும்.

பிறப்புத் தொடர்பற, பிணி மூப்பு, சாக்காடு, துன்பம், அழுகை, கவலை, மனமுறிவு முதலிய முடிவுறாத் துன்பங்கள் ஒழியும்.

இம்முறையே உய்தி43 [மீட்சி]!44